காரனோடை, ஜன.26 அறிவுலக ஆசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாச, அருவருக்கதக்க, விஷமக் கருத்துகளைப் பதிவிட்ட சென்னையை அடுத்த காரனோடை சிறீராம் மருந்தக உரிமையாளர், ஆர்.எஸ்.எஸ்.-அய்ச் சேர்ந்த கோபாலன் என்பவர் மீது கும்மிடிப்பூண்டி மாவட்டம்,சோழவரம் ஒன்றிய தலைவர் ந.கஜேந்திரன் அவர்கள் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் திராவிடர் கழகம் தி.மு.க., வி.சி.க., காங்கிரஸ், தாய்த்தமிழர் இயக்கம் மற்றும் முற்போக்கு கருத்தாளர்கள் ஒன்று சேர்ந்து மாவட்டத்தலைவர் புழல் த.ஆனந்தன் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் காரணமாக அந்த நபரை சோழவரம் காவல் துறையினர் கைது செய்தனர்,மேல் நடவடிக்கைக்காக ஆவடி காவல் ஆணையாளரிடம் புகார் மனு ஒன்றை மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப.சக்கரவர்த்தி அளித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment