புதுக்கோட்டை, ஜன.28 புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டையில் திராவிட மாணவர் கழக புதிய கிளை தொடங்கப்பட்டது.
17.01.2022 அன்று மதியம் 3 மணிக்கு புதுக் கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டையில் திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம் திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூரப் பாண்டியன் தலைமையில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அ. சரவணக்குமார், புதுக்கோட்டை மண்டல தலைவர் பெ.இராவணன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முனைவர் மு. அறிவொளி, அறந்தாங்கி மாவட்ட தலைவர் க. மாரி முத்து, அறந்தாங்கி மாவட்ட செயலாளர் கரம்பக்குடி க. முத்து, கந்தர்வக்கோட்டை ஒன்றிய மாணவர் கழக தலைவர் குட்டி.வீரமணி ஆகியோர் முன்னிலையில்,
மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேக ரன், தலைமைக் கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் ஆகியோர் அறிவாசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மக்களுக்கு அடுத்த தலைமுறைகளுக்கும் உழைத்த உழைப்பைப் பற்றியும், தொடர்ந்து உழைக்கும் திராவிடர் கழகத்தைப் பற்றியும் மிகச் சிறப்பாக விரிவாக மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர். கூட்டத்தில் தொடர்ந்து புதிய ஆதனக்கோட்டை திராவிட மாணவர் கழக கிளைக் கழக பொறுப்பாளர் கள் அறிவிக்கப்பட்டனர்.
ஆதனக்கோட்டை கடைவீதி முக்கிய சாலையில், கழக லட்சியக் கொடியை புதுக்கோட்டை மண்டல தலைவர் பெ. இராவணனால் மாணவர்கள் முழக்கத் துடன் ஏற்றப்பட்டது. பெரியாரியல் பயிற்சி வகுப்பு மாணவர்கள் செல்வசூர்யா மற்றும் மேகலா ஆகிய இருவருக்கும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சான்றிதழ், புத்தகம் வழங்கி மகிழ்ந்தார்.
மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அ. சரவணன் ஏற்பாட்டில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு மாணவர் செல்வசூர்யா அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்தார்.
புதிய பொறுப்பாளர்கள்
புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட் டனர். புதுக்கோட்டையில் மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் மு.செல்வசூர்யா. புதுக்கோட்டை ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் ஜெ.மேகலா.. ஆதனக் கோட்டை கிளைக் கழக மாணவர் கழகப் பொறுப்பாளர்கள்: தலைவர்: இரா.யோகராஜ்; துணைத் தலைவர்: த.ராகுல்;செயலாளர்: தெ.வீரமணி; துணைச்செயலாளர்: ரெ. சுஜித்ரா; அமைப்பாளர்: சே. விஜய்.
No comments:
Post a Comment