ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசுக் கல்லூரியானது வரவேற்கத்தக்கது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசுக் கல்லூரியானது வரவேற்கத்தக்கது

 முதலமைச்சருக்கு நன்றி கூறுகிறோம்

ஈரோட்டில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்ற பல ஆண்டுகளாக 1400 மாணவர்களும் ஆசிரியர்களும் வாதாடி, போராடி வந்தனர். இப்போது நமது விடியல் முதலமைச்சர் மு..ஸ்டாலின் காலத்தில்தான் அதுவும் விடிந்திருக்கிறது -முடிந்திருக்கிறது.

அந்தக்கல்லூரியின்தலைவர்தந்தை பெரியார்தான்.அய்யாபெரிதும்அதை சிக்கய்ய நாயக்கர் மேற்பார்வையிலேயே விட்டார்; அவருக்குப் பின் பலவகை கோளாறுகள் ஏற்பட்ட நிலையில், நமது முதல் அமைச்சர் அதை அரசுக் கல்லூரியாக இன்று (10.1.2022) அறிவித் திருப்பதோடு, உச்சநீதிமன்றம் 27 சதவிகித ஒதுக்கீடு - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அறிவித்திருப்பதும், அதன்படி முதன் முத லில் மத்திய தொகுப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்து, செயல்படுவதும் பெரியாருக்குக்காணிக்கை' என்று பூரிப்புடன் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கல்லூரியும் பெரியார் விரும்பியபடி சிறந்த கல்லூரியாக வளருவதற்கு இந்த ஏற்பாடு வரவேற்கத்தகுந்ததாகும்.

இதற்காகப் பெரியார் தொண்டர்கள் சார் பாகவும், ஈரோடு மக்கள் சார்பாகவும் முதல மைச்சருக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். கல்வி நெறிக்காவலர் நெ.து.சுந்தர வடிவேலு பெயரில் பெரியார் பரிசளிக்க நன்கொடை அளித்து நடந்து வந்த சிறப்புத் தகுதியும் அக்கல்லூரிக்கு உண்டு.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.1.2022

குறிப்பு:  இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முதலமைச்சர் அவர்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பாராட்டினையும், நன்றி யையும் தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment