யாங்கூன், ஜன.10 மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சுகாதார பணி யாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மியான்மாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத் தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. அவசர நிலையையும் மியான்மர் ராணுவம் அறிவித்தது.
வெடித்த போராட்டம்
மியான்மரில் ராணுவம், ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இளைஞர்கள், மருத்துவர்கள் ஆசிரி யர்கள் என அனைவரும் வீதிக்கு வந்து மியான்மர் ராணுவத்துக்கு எதிராக போராடினர்.
இதில் குறிப்பாக மியான்மர் மருத்துவர்களின் போராட்டம் உல களவில் அனைவரது பார்வையும் ஈர்த்தது. சுமார் 55 மருத்துவமனைகளை ராணுவம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் மருத்துவர்களும், செவிலியர்களும் சாலைகளில் இறங்கி பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். தற்போதும் இந்தப் போராட்டத்தைதான் பலர் மருத்துவர்கள் முன்னெடுத்துள் ளனர்.
மியான்மர் மருத்துவர்களின் இந்தப் போராட்டம், "வெள்ளை அங்கி" போராட்டம் என அழைக்கப்படுகிறது. மியான்மரில் சுமார் 500 சுகாதார பணியாளர்கள் மியான்மர் ராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் உட்பட 25 சுகாதார பணியாளர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 190 சுகாதார பணியாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க மியான்மரில் ராணுவ அடக்குமுறை காரணமாக, 70% சுகாதார பணியார்கள் தங்களது வேலையிலிருந்து விலகியுள்ளதால் மியான்மரில் மருத்துவ நெருக்கடி ஏற்பட்டது. எனினும் அவர்கள் குழுக்களாக இயங்கி மியான்மர் மக்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment