பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் தலையாரித் தெருவில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துக்குச் சொந்தமான கட்டடம் பழுதடைந்த நிலையில் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையரின் உத்தரவுக் கிணங்க, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைக் கிணங்க பழுதடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந் நிலையில் 24.01.2022 அன்று சரியாக மாலை 5 மணிக்கு கட்டடம் இடிக்கும் பணி தொடங்கியது பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், ஒரத்தநாடு, தஞ்சாவூர், சேதுபாவா சத்திரம், திருவோணம் ஒன்றிய பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் திரண்டு வந்தனர்
கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரை யன், மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித் தார்த்தன், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, பேச்சாளர் இராம. அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் அரு. நல்லதம்பி, இரா.நீலகண்டன், பட்டுக்கோட்டை மாவட்ட துணைச்செயலாளர் காளிதாசன், மாவட்ட அமைப்பாளர் சோம. நீலகண்டன், பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி வை.சேகர்,மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் அ.அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் கா.தென்னவன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் நகர இளைஞரணி செயலாளர் தென்னரசு, பட்டுக்கோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், பட்டுக்கோட்டை ஒன்றியத்தலைவர் வீரமணி, மதுக்கூர் ஒன்றிய செயலாளர் புலவஞ்சி அண்ணாதுரை, ஒன்றிய ப.க தலைவர் புலவஞ்சி காமாராஜ், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி ரங்கசாமி, மதுக்கூர் ஒன்றிய அமைப்பாளர் இராதாகிருஷ்ணன், அத்திவெட்டி ஆட லரசு, வீ.வீரமணி, மண்டலக் கோட்டை சரவணன், மதுக்கூர் ஒன்றிய துணைத் தலைவர் சிவாஜி, திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி. அரசிளங்கோ, ஒரத்தநாடு ஒன்றிய துணைச் செயலாளர் இரா.சுப்ரமணியன், மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், பெரியார்நகர் அ.உத்திராபதி, தஞ்சை மாவட்ட இணைச்செயலாளர் தி.வா.ஞானசிகாமணி, வடசேரி இராமசாமி, தொண்டராம்பட்டு வீரமணி, பேராவூரணி வசி, மன்னை ஒன்றிய தலைவர் மேலவாசல் தமிழ்ச்செல்வன், மன்னை போஸ், தஞ்சை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ப.விஜயக்குமார், தஞ்சை மாநகரச் செயலாளர் அ. டேவிட், சமரன் வெற்றிமாறன், வி.சி.க தொகுதி பொறுப்பாளர் சக்ரவர்த்தி தலைமையில் வி.சி.க தோழர்கள் உள்ளிட்டோர் திரண்டு பட்டுக்கோட்டைக்கு வருகை தந்தனர்
கட்டடம் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
No comments:
Post a Comment