சமூக நீதியின் வெற்றி! 2544 மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் இடம் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

சமூக நீதியின் வெற்றி! 2544 மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் இடம் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்

மருத்துவ முதுநிலைக்கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடான 9,393 இடங்களில் பொதுப் போட்டியாளர் களுக்கு 3,899 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு 2,544 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 1,390 இடங்களும், பழங்குடியின வகுப்பினருக்கு 686 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பொருளாதாரத் தில் நலிவுற்ற உயர்ஜாதியினருக்கு 874 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் 8.5.2020 தேதி அன்று பிற்படுத்தப்பட்டவர்களுக்கு  மறுக்கப்படுகின்ற இடஒதுக்கீடு குறித்து அறிக்கைமூலம்  வெளிப்படுத்தி, பொது தளத்திலும், அரசியல் தளத்திலும் இப்பிரச் சினையில் அனைவரிக் கவனத்தையும் ஈர்த்து களம் காணச் செய்தார்.

தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் டாக்டர்

டி.ஒய்.சந்திர சூட் மற்றும் .எஸ்.போபண்ணா ஆகியோர் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். அரசியல் ரீதியிலும், சட்டரீதியிலும் இப்பிரச்சி னையில் போராடி வெற்றி கண்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள்.

மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் பி.வில்சன் இவ்வழக்கில் திறமையாக கருத்துகளை முன்வைத்து வாதிட்டார். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மக் களவை, மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டி லுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப் புகள் - என இப்பிரச்சினையில் வெற்றி காண போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

- கோ.கருணாநிதி,

பொதுச் செயலாளர்,

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு.

No comments:

Post a Comment