தடுப்பூசி அட்டை கட்டாயம்; நேபாள அரசு முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

தடுப்பூசி அட்டை கட்டாயம்; நேபாள அரசு முடிவு

காத்மாண்டு, ஜன.10 நேபாளத்தில் வரும் 17ஆம் தேதி முதல் பொது இடங் களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம் என்ற முடிவை அரசு எடுத்து உள்ளது.

உலக நாடுகளை அச் சுறுத்தி வரும் கரோனா பாதிப்புக்கு இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் சிக்கி தவித்து வருகிறது. 

இதனை முன் னிட்டு பல்வேறு தடுப்பு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு  வருகின்றன.

இந்த நிலையில், அரசு அலுவலகங்கள், ஓட் டல் கள், திரையரங்குகள், ஸ்டேடியங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதற்கும் மற்றும் உள்ளூர் விமானங்களில் ஏறுவதற்கும் கரோனா தடுப்பூசி செலுத்திய தற்கான அட்டையை கட் டாயம் வைத்திருக்க வேண் டும் என்ற முடிவை அரசு எடுத்துள்ளது.

No comments:

Post a Comment