அறிகுறி இல்லாமல் வரும் ஆபத்தான பக்கவாத நோய் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

அறிகுறி இல்லாமல் வரும் ஆபத்தான பக்கவாத நோய்

''மனிதனுக்கு உண்டாகும்நோய்களில்ஆபத்தானது பக்கவாதம்‌. ரத்த நாளங்களில்அடைப்பு உண்டாகி, மூளையின்பாகங்கள்செயல்இழப்பதைதான்பக்கவாதம்என்கிறார்கள்‌. எந்தவித முன்அறிகுறியும்இல்லாமல்வரக்கூடிய ஆபத்தான நோய்இது. அதனால்தான்இதை ஆங்கிலத்தில்ஸ்ட்ரோக்என்பார்கள்‌. மூளைக்கு செல்லும்ரத்த ஓட்டத்தடை, ரத்தக்கசிவு போன்ற காரணங்களால்பக்கவாதம்ஏற்படுகிறது. இதனால்உடலின்பாகங்கள்செயல்பாட்டை இழந்து அசைவின்றிப் போய்விடுகிறது.

அதிக அளவு ரத்த அழுத்தம்‌, தேவையற்ற கொழுப்புப் பொருள்கள்உடலில்தேங்குவது போன்றவைதான்பக்கவாதம்வரத் துணை புரிகிறது. மரபு ரீதியாகக் கூட இந்த பக்கவாத நோய்அதிகம்உண்டாகிறது என்கிறார்கள்‌. ஒவ்வொரு ஆறு விநாடிக்கும்ஒருவரைத் தாக்கும்இந்த நோய்ஆண்டுக்கு சுமார்ஆறு கோடி பேரை பாதிக்கிறதாம்‌. அதில்ஒன்றரை கோடி பேர்மரணமும்அனடைந்துவிடுகிறார்களாம்‌.

நம்நாட்டைப்பொறுத்தவரை, ஆண்டுக்கு 6 லட்சம்பேர்வரை பக்கவாத நோயால்பாதிக்கப்படுகிறார்கள்‌. அதில்ஒன்றரை லட்சம்பேர்வரை பலியாகிறார்கள்என்கிறது மருத்துவ உலகம்‌.

தலைவலி, பார்வை மங்குதல்‌, திடீர்மயக்கம்‌, கை, கால்களில்தளர்ச்சி, உணர்ச்சிக்குறைவு, மரத்துப்போதல்‌, பேச்சுக்குழறல்போன்றவை இந்த நோய்தாக்குவதைக்காட்டும்உடனடி அறிகுறியாகும்‌. ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்தல்‌, உடற்பயிற்சி, சீரான உணவு, சந்தோஷமான சூழல்‌, புகை, மது ஒழித்தல்போன்றவை இந்த நோயை வரவிடாமல்பாதுகாக்கும்‌. மேலும்‌, இதய நாள நோய்‌, சர்க்கரைக் குறைபாடு கொண்டவர்களைப்பக்கவாதம்தாக்கும்ஆபத்து அதிகம்‌. எனவே, இவர்கள்ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்‌.

ஆண்டுக்கு ஆண்டு பக்கவாத நோயாளிகளின்எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

No comments:

Post a Comment