கீரையினை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் எந்த ஒரு நோயின் பாதிப்பும் எளிதில் ஏற்படாது. கீரைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். பச்சை இலையை நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். வாரம் இரண்டு முறை கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், செரிமான பிரச்சினையும் நீங்கி விடும். உடல் வெப்பம் அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டுவர, உடல் வெப்பம் தணியும்.
Monday, January 3, 2022
உடல் வெப்பம் தணிக்கும் மணத்தக்காளி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment