ஜவுளித்துறைக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

ஜவுளித்துறைக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

புதுடில்லி, ஜன.29 ஜவுளித்துறையில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஜவுளித்துறையில் வளர்ச்சியை ஊக்கு விப்பதற்காக உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.10 ஆயிரத்து 683 கோடி ஊக்கத்தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜவுளித் துறையை சேர்ந்தவர்கள் இந்த ஊக்கத்தொகையை பெற கடந்த ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கடைசி தேதி இம்மாதம் 31ஆம் தேதியாக இருந்தது. இந்தநிலையில், கடைசி தேதி அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment