ரயில் பயணத்தின்போது சத்தமாக பேசினாலோ, பாடல் கேட்டாலோ அபராதம் ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

ரயில் பயணத்தின்போது சத்தமாக பேசினாலோ, பாடல் கேட்டாலோ அபராதம் ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை, ஜன. 25- ரயில்களில் பயணம் செய்யும்போது சத்தமாக பேசினாலோ அல்லது சத்தமாக பாடல் கேட் டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

இதுகுறித்து ரயில்களில் பயணம் செய்வோருக்கான புதிய விதிமுறைகளை ஒன்றிய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  ரயில்களில் பயணம் செய்யும்போது சத்தமாக பேச மற்றும் அலைபேசியில் சத்தமாக பாட்டு கேட்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும் இரவு 10 மணிக்கு பிறகு அனைத்து விளக்கு களையும் அணைக்க வேண்டும். அதேபோல் பயணிகள் தங்களுக்கு குறைகள் இருப்பதாக புகார் அளித்தால் உடனே ரயில்வே காவல்துறையினர் மற்றும் பயணச்சீட்டு ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து ரயில்வே பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் பயணிகளுடன் பணிவுடன், சாதுர்யமாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். 

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தனிமையில் உள்ள பெண் பயணிகளுக்கு தேவை யான அனைத்து உதவிக ளும் ரயில்வே ஊழியர்க ளால் வழங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment