சென்னை, ஜன.7 தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவில் மகளிருக்கான சிறப்பு பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகளை திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தின.
பேச்சுப் போட்டி:
தகுதிச் சுற்றின் போது பேச்சுப் போட்டியில் 13 மகளிர் பங்கேற்றனர். பேச்சுப் போட்டி தகுதிச் சுற்றுக்கான தலைப்புகள்:
1) சிந்தனையின் சிகரம் பெரியார்
2) பெரியாரைச் சுவாசிப்போம்..
பங்கேற்றவர்களில் 8 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதிச் சுற்றுக்கான தலைப்புகள்:
1) திராவிடர் இயக்கமும் பெண்களும்
2) நிலமெல்லாம் அவன் நடந்த தாரை
பேச்சுப் போட்டியில் பரிசு பெற்றோர்:
முதல் பரிசு: வி.இலட்சுமி (திருவண் ணாமலை) இரண்டாம் பரிசு : டி.நர்மதா (திருவாரூர்) மூன்றாம் பரிசு : பி.ஆனந்தி (சென்னை)
கவிதைப் போட்டி:
கவிதைப் போட்டியில் தகுதிச் சுற்றின் போது 15 மகளிர் பங்கேற்றனர்.
தகுதிச் சுற்றுக்கான தலைப்புகள்:
1) பெரியார் கண்ட பெண்ணிய புரட்சி
2) நீரெல்லாம் அவன் வியர்வை
கவிதைப் போட்டியில் பங்கேற்றவர்களில் 8 மகளிர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்.
இறுதிச் சுற்றுக்கான தலைப்புகள்:
1) பெண்ணே! தடைகளை உடை!! புதிய சமுதாயம் படை!!!
2) பெண்ணே! சனாதனத்தைச் சாடு!! சமத்துவத்தை நாடு!!!
கவிதைப் போட்டியில் பரிசு பெற்றோர்:
முதல் பரிசு: பி.ஆனந்தி (சென்னை) இரண்டாம் பரிசு: எஸ். சுஷ்மிதா (தர்மபுரி) மூன்றாம் பரிசு: எஸ். நவிகனிஷ்கா (சேலம்), எம்.எஸ்.யாமினி (வேலூர்)
பங்கேற்ற அனைவருமே சிறப்பாகத் தங்கள் பேச்சுத் திறனையும் கவிதைத் திறனையும் வெளிப்படுத்தினர்.
இவர்களுக்கு அறிவித்தபடி கீழ்க் கண்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல் பரிசு: ஓராண்டு விடுதலை நாளிதழ், இரண்டாம் பரிசு: அரையாண்டு விடுதலை நாளிதழ், மூன்றாம் பரிசு: ஓராண்டு 'உண்மை' மாதமிருமுறை இதழ்
பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகளின் இறுதிச் சுற்றில் பங்கேற்ற, ஆனால் பரிசுகள் பெறாத அனைவரின் முயற்சியையும் திறமையையும் பாராட் டும் வகையில் அந்த 7 பேருக்கும் ஆறு தல் பரிசளிக்கப்பட்டது.
ஆறுதல் பரிசு பெற்றோர்:
1) பி.சிந்து, 2) எஸ்.மாரியம்மாள், 3) எம்.வசுமதி, 4) எஸ்.தில்லைக்கரசி, 5) வி.அகிலா, 6) பி.ரேவதி, 7) எம்.செல்வி
ஆறுதல் பரிசு : ஓராண்டு 'பெரியார் பிஞ்சு' மாத இதழ்
சிறப்பாக பங்கேற்றமைக்கு அனை வருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்!
போட்டிகள் சிறப்பாக நடக்க உறு துணையாக இருந்த நடுவர்கள் வா.நேரு, அண்ணா சரவணன், ந.எழிலரசன், கலைமணி பழனியப்பன், ம.வீ.கனிமொழி, மு.சு.கண்மணி, ம.கவிதா, ச.இன்பக்கனி, தகடூர் தமிழ்ச்செல்வி, பா.மணியம்மை, சே.மெ.மதிவதனி, ஓவியா அன்புமொழி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
பரிசுகளை அன்பளிப்பாகத் தந்து உதவிய கழக மகளிர் பொறுப்பாளர்கள் ச.ஈஸ்வரி, கலைமணி பழனியப்பன்,
ச இன்பக்கனி, தகடூர் தமிழ்ச்செல்வி ஆகி யோருக்கும் நன்றிகள்!
மகளிருக்கான சிறப்பு பெரியாரியல் பயிற்சி வகுப்புகளில் கீழ்க்கண்ட மூவர் கைக்குழந்தையுடன் பங்கேற்று தேர்வும் எழுதினர்.
1) ஜெயந்தி, 2) பி.ஆனந்தி, 3) தேன் மொழி பிரபாகரன்
தவிர, மகளிருக்கான சிறப்பு பெரியாரி யல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றவர்க ளுக்கு வினாடி-வினா போட்டி, 'பெண் விடுதலை' கட்டுரை போட்டி ஆகியவை நடத்தப்பட்டடன. கீழ்க்கண்ட மகளிர் இப்போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
1) ஜெ.மேகலா, 2) எஸ்.எஸ்.பிரிய தர்ஷிணி, 3) இந்துபாலா இராவணன், 4) பி.எஸ்.கிரிஜா, 5) ஷாலினி ஜெரால்ட், 6) எஸ்.மாரியம்மாள், 7) எஸ்.தில்லைக்கரசி, 8) பி. பரமேஸ்வரி, 9) சங்கீதா நாகசாமி, 10) எம்.கே. குமுதா, 11) சு.சாந்தி, 12) எஸ். தமிழரசி, 13) இராஜகுமாரி, 14) யாழ்சுபா பிரபாகரன், 15) யு. அன்புக்கனி
இவர்கள் அனைவருக்கும் (மொத்தம் 18 பேர்) அன்புள்ளத்தோடு 'பெண் விடு தலை' புத்தகங்களைப் பரிசாக வழங்கிய வீ.மோகனா அம்மையார் அவர்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் நெமிலிச்சேரி (அரக்கோணம்) லோக நாதன் அவர்களுக்கும் நன்றிகள் பல!
- திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை
No comments:
Post a Comment