இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் இந்துத்துவ சக்திகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் இந்துத்துவ சக்திகள்!

சிறுபான்மையினப் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் ஆபாசமாக படம் எடுத்து இணையத்தில் ஏலம் விட்டது தொடர்பாக 18 வயது ஸ்வேதா சிங், மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஒருவர் கைதான நிலையில் அசாமில் இருந்து முக்கிய குற்றவாளி ஒருவரும் கைதுசெய்யப்பட்டார். இவர்கள் இந்துத்துவ அமைப்பினால் மூளைச்சலவை செய்யப்பட்டு சிறுபான் மையினப் பெண்களை இழிவுபடுத்தும் வேலையில் ஈடுபட்டு தற்போது குற்றவாளியாகி நிற்கின்றனர்.

புல்லிபாய்' என்னும் செயலி மூலம் பல பிரபல பெண்மணிகள், மாணவிகள் எனப் பலரின் ஒளிப்படங்கள் அவர்களுக்குத் தெரியாமல் இழிவான கருத்துக்களுடன் பதிவிடப்பட்டன. இந்த  செயலியை நடத்தி வரும் முக்கியமான நபரான நீரஜ் பிஷ்னோய் என்பவர் டில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 21 வயது இளைஞரான நீரஜ் பிஷ்னோய் அசாம் மாநிலத்தில் வசிப்பவர் ஆவார்.  நீரஜ் போபாலில் உள்ளவேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யில் பிடெக் படித்து வருகிறார்.   இவரை அசாமில் கைது செய்த காவல்துறையினர் டில்லிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் போபால்விஅய்டி' வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது கல்வி நிலையத்தில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் பி.டெக் படித்து வரும் நீரஜ் பிஷ்னோய்புல்லிபாய்' செயலி தொடர்பாக டில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் உடனடியாக அடுத்த அறிவிப்பு வரும் வரை இடை நீக்கம் செய்யப்படுகிறார்.  கல்வி நிலையத்தின் நற் பெயருக்கு அவர் களங்கம் ஏற்படுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாடு முழுவதும் மதவெறி நச்சைத்தூவி வரும் இந்துத்துவ அமைப்புகள், படிக்காதவர்களை ஒரு பக்கம் வன்முறையில் ஈடுபடத் தூண்டுகின்றன. படித்தவர்களை இணையவழி தாக்குதல்கள் மூலம் - சிறுபான்மையினப் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது, அலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை மனதளவில் துன்புறுத்து வது, மிரட்டுவது எனப் பல விதமாக மதவெறிச் சிந்த னைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட மதவெறிச் சிந்தனைகளில் வீழ்ந்த இளைஞர்கள் மிகவும் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சிறுபான்மையினர் மீதான வன்மத்தை  சிறுபான்மையினப் பெண்கள் மீது காட்டி யுள்ளனர்.

சிறுபான்மையினப் பெண்களை, அவர்கள் அறியாமல் அலைப்பேசியில் ஆபாசமாக படம் எடுத்து, அதனை அலைபேசி செயலி மூலம் ஏலம் விட்டுள்ளனர். அதாவது அவர்களை சமூகத்தில் இழிவு படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நடந்த விசாரணையில்ஸ்வேதா சிங்' என்ற 18 வயது முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி முதல் முதலாக கைது செய்யப்பட்டார். இது பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியது, அவரிடம் நடத்தப்பட்ட விசார ணையில் பெங்களூருவைச் சேர்ந்த 19 வயது பொறியியல் மாணவன் கைதுசெய்யப்பட்டான்.

 இதனை அடுத்து தற்போது போபாலில் உள்ள வேலூர் அய்.அய்.டி.யில் படித்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டு உள்ளான். இவன்தான் போபால், பெங்களூர், அசாம் என நாடு முழுவதும் படித்து வரும் இளைஞர்களை இந்துத்துவா மூளைச்சலவை செய்து வரும் ஆசாமி. கடந்த மாதம் சாமியார்கள் அமைப்பு ஒன்று இதே போன்றுதான் சிறுபான்மையினரைக் கொலை செய்யுங்கள். இஸ்லாமிய கிறிஸ்தவப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யுங்கள். அவர்களின் ஆடைகள் இல்லாத படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு, அவர்கள் தெருவில் நடமாட முடியாத படி செய்யுங்கள் என்று பேசி இருந்தனர். இந்த நிலையில் மிகவும் குறைந்த வயதுள்ள படிக்கும் இளை ஞர்களையும் இந்த செயலில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்துத்துவ அமைப்புகள் இளைஞர்களின் மனதில் எவ்வகையான நஞ்சை விதைத்து வருகின்றன என்பதை நினைத்தால் இது நாடா அல்லது காடா என்று அஞ்ச வேண்டியுள்ளது.

எந்தெந்த வித்தைகள், யூகங்கள், புனைவுகள், பயிற் சிகள் மூலம் பா...-சங்பரிவார் ஊடுருவுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு

கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் மூன்று உரைகளை நிகழ்த்தினார். அதில் இதுவும் ஒரு வகை - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

Post a Comment