எல்.அய்.சி.,க்காக எளிதாக்கப்படும் வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

எல்.அய்.சி.,க்காக எளிதாக்கப்படும் வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கை

புதுடில்லி, ஜன.10  நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.அய்.சி.,யில், ஒன்றிய அரசு பங்கு விலக்கலை மேற்கொள்ள வசதியாக, வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கையில், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் மாற்றங் களைச் செய்து வருகிறது.

இது குறித்து, தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த் தக துறையின் செயலர் அனுராக் ஜெயின் கூறியதாவது:

நாங்கள் இப்போது வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கையை மேலும் எளிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம்.முக்கியமாக, எல்.அய்.சி., நிறுவனத்தின் பங்கு களை, ஒன்றிய அரசு விற்பனை செய்ய இருப்பதால், அதை எளி தாக்கும் பொருட்டு, திருத்தப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடு கொள் கையை கொண்டுவர இருக்கிறோம்.

இது குறித்து, நிதி சேவைகள் துறை, முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாக துறை ஆகியவற் றுடன் ஆலோசனை நடத்தப் பட்டுள்ளது.இதுவரை இரு முறை ஆலோசனை கூட்டங்கள் என்ன ளவில் நடத்தப்பட்டு உள்ளன. இதனையடுத்து, இந்த துறைகள் அனைத்தும் ஒருமித்தமுடிவுக்கு வந்துள்ளன. அதனால், கொள் கையில் மாற்றங்களை சேர்த்து வருகிறோம். இதன் பின், அவை ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புத லுக்கு சமர்ப்பிக்கப்படும்.

தற்போதைய அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி, காப்பீட்டுத் துறையில் ரிசர்வ் வங்கி, அரசு ஆகியவற்றின் முன் அனுமதி பெறாமலே, ஆட்டோமேட்டிக் வழியில் 74 சதவீதம் வரை, வெளிநாட்டு முதலீட்டை மேற் கொள்ளலாம்.ஆனால், இந்த விதி எல்.அய்.சி.,க்கு பொருந்தாது. ஏனெ னில் எல்.அய்.சி.,க்கு என தனியான சட்டம் உள்ளது.

இதன்படி, வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு எல்.அய்.சி.,யில் இடம் இல்லை. எல்.அய்.சி., புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதால், கொள் கையளவில் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment