காந்தியார் படுகொலை சதித் திட்டப் பின்னணிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

காந்தியார் படுகொலை சதித் திட்டப் பின்னணிகள்

- தீரேந்திர கே. ஜா -

காந்தியாரின் படுகொலை : நாதுராம் கோட்சேயின் செயல்பாடு மற்றும் இந்தியா பற்றிய அவரது கருத்து என்னும் தனது புதிய நூலில், விசாரணைக்கு முன் கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் மீது,  தீரேந்திர கே. ஜா வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார். நீதிமன்ற அறையில் தான் முன்னர் அளித்த  அந்த வாக்கு மூலத்தில் தன்னைப் பற்றிய தோற்றத்தையும்,  கோட்சே வாழ்ந்த உண்மையான வாழ்க்கையை மறைத்து  ஆர்.எஸ்..ஸ். எழுத்தாளர்கள் உருவாக்கிய மாயையையும், கட்டுக் கதைகளையும், காந்தியாரின் படுகொலைக்கு வழிநடத்திச் சென்றதற்கு  தன்மீது செயல்பட்ட செல்வாக்குகளையும்  கோட்சே மறுத்துள்ளார்.

காந்தியாரின் படுகொலை மற்றும் அதனை ஒட்டிய நிகழ்வுகளைப் பற்றி ராஷ்டிரிய சுயம் சேவக் அமைப்பும், ஹிந்து மகாசபை அமைப்பும் எத்தகைய  கருத்தைக் கொண்டிருந்தன என்பதை ஊகித்து உணர்வது கடினமாகவே இருந்தது. ஆனாலும், காந்தியாரின் படுகொலை நடந்த பிறகு 24 மணி நேரத்தில், தங்களைப் பேரழிவில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும்,  தங்களது நற்பெயரை ஓரளவுக்கேனும் தக்க வைத்துக் கொள்ளவுமான வழிகளை அவர்கள் தேடிக் கொண்டிருந்தனர். பெருவாரியான நாட்டு மக்களின்  சோகம் மிகவும் நிச்சயமானது என்பதால் அவர்கள் தங்கள் மனங்களை இழந்து விட்டது போலவே தோன்றியது. 

இத்தகைய வன்முறை கலந்த எதிர்வினையாற்ற லின் மய்யத்தில், மராட்டிய பார்ப்பனர்கள் மீது தாழ்த்தப்பட்ட ஜாதிப் பிரிவைச் சேர்ந்த மக்கள் பலர் தெரிவித்த குறைபாடுகளைப்  பற்றி அவர்களுக்கு  கோபம் இருந்தது. ஆர்.எஸ்.எஸ். மூலமும், ஹிந்து மகாசபை மூலமாகவும்,  ஹிந்து ராஷ்டிரா என்ற தங்களது இலக்கினை அடைய முடியும் என்று மராட்டிய பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர் கனவு கண்டு வந்திருந்தனர். காந்தியாரின் படுகொலைக்குப் பிறகு அவர்களுக்கு எதிராக உருவான எதிர்ப்பு ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து மகாசபையைப் பற்றி மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையின்மையை இது மேலும் தீவிரமாக ஆக்கியது. ஜனவரி 31 அன்று அவர்கள் மேற்கொண்ட எதிர் தாக்குதல் யாருமே எதிர்பார்த்திராத, கற்பனை செய்து கூட பார்க்க இயலாத அளவில் தீவிரமாக இருந்தது.

கோல்வால்கரும், சாவர்கரும் மேற்கொண்ட முழுமையான திருப்பம்

அதற்கு அடுத்த நாள் காலையில்  மாதவ் சதாசிவ் கோல்வால்கர் ஓர் அறிக்கையை நாக்பூரில் இருந்து வெளியிட்டார். விரும்பத்தகாத இந்த சோக நிகழ்ச்சி யின் இடையே, மக்கள் சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டு, அன்பு சேவை என்ற கோட்பாட்டை கடைப்பிடிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டு, அனைவரிடமும் அன்பான அணுகுமுறையை மேற்கொள்ளும்படி  எனது சகோதரர்களான அனைத்து சுயம் சேவக்கு களுக்கும் நான் கட்டளை இடுகிறேன். தவறுதலாகப் புரிந்து கொண்டதினால் அவர்களுக்கு எதிராக  எந்த விதமான தாக்குதல் நடைபெற்றாலும் கூட, அத்தகைய கோபதாபங்களுக்கு நமது தாய்நாட்டின் பெயரை உலகிலேயே மிகப்பெரிய அளவில் மதிப்பும் மரியாதையும்  மிகுந்ததாகச்  செய்த மாபெரும் தலை வரான காந்தியாரின் பால் கொண்டிருந்த எல்லையில்லாத அன்பும், மரியாதையுமே காரணம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். மறைந்த நமது மரியா தைக்குரிய தலைவருக்கு நமது வீரவணக்கங்கள் என்று அவர் அதில் கூறியிருந்தார்.

காந்தியார் உயிரோடு இருந்தபோதெல்லாம் அவர்கள் வழக்கமாக பயன்படுத்திய மொழி இது போன்றதல்ல. காலமெல்லாம் அவர்கள் காந்தியார் மீது விஷத்தையே தெளித்து வந்தனர். 15 நாட்களுக்கு முன்பு அவர் பட்டினிப் போரில் ஈடுபட்டு இருந்த போது கூட,  அவர் இறந்து போய்விடக் கூடாதா என்று அவர்கள் விரும்பினர். மக்களின் கோப ஆவேசத்தைக் கண்டு அதிர்ந்து போன ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இப்போது 180 பாகை அளவில் தனது நிலைப் பாட்டை மாற்றிக் கொண்டது. காந்தியாரின் கோட்பாட்டில் தங்களது அமைப்பு நம்பிக்கை கொண்டிருக்கிறது என்று உடனடியாக கோல்வால்கர் அறிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். பணியாளர்கள் மற்றும் அலுவல கங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்  கையாளப்பட்டன. காந்தி யாரின் படுகொலைக்கான பொறுப்பு பொதுவான சந்தர்ப்பத்தின் மீதுதான் சுமத்தப்பட்டதே அன்றி, அந்த அறிக்கையில் கொலை செய்த கோட்சேவைப் பற்றி எந்த விதக் குறிப்போ, செய்தியோ இருக்க வில்லை. கோட்சே தங்களது அமைப்பின் ஓர் உறுப் பினர் என்ற உண்மையை ஒப்புக் கொள்ளும் நேர் மையோ துணிவோ அவரது தாய் அமைப்புக்கு இல்லாமல் இருந்திருக்கக்கூடும். பிப்ரவரி 1 ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பம்பாய் பிரிவின் சங் சலக் விடுத்த ஒரு அறிக்கையில், கோட்சே முழுவதுமாக கைவிடப்பட்டார்.   காந்தியா ரைப் படுகொலை செய்தவர் என்று குற்றம் சாட்டப் பட்டவருக்கும் எங்கள் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்புக் கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காந்தியாரின் உயிர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள  இந்த கொடுமையான, கோழைத்தனமான  தாக்குத லுக்கு நாம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள் ளோம்.  எங்களது மய்யங்களை 13 நாட்கள் மூடி வைப்பதன் மூலம்  இந்த தேசியப் பேரிடருக்காக நாங்கள் தேசிய அளவில் துக்கம் காக்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வி.டி.சாவர்க் கரின்  அணுகுமுறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணுகுமுறையில் இருந்து எந்த விதத்திலும் மாறு பட்டிருக்கவில்லை. காந்தியாரின் படுகொலையின் விளைவுகள் தெரிய வந்தபோது,   கோல்வால்கரைப் போல அவரும், பேரச்சத்தைக் கொண்டவராக இருந் தார். தனது நற்பெயரைப் பாதுகாத்துக் கொள்ள ஆர்வம் கொண்ட ஹிந்து மகாசபையின் தலைவரான சாவர்க்கர் தனது அறுபது வயதுகளில் இருந்தவர்.

ஜனவரி 31 ஆம் தேதியன்று காலை கலவரக்காரர் கள் சாவர்க்கரின் வீட்டின் மீது தாக்குதல் மேற் கொண்டபோது, கோட்சேயுக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று கூறி சாவர்க்கர் கோட்சேயைக் கைகழுவிவிட்டார். காந்தியாரின் படு கொலையைக் கண்டித்தும், கொலையாளியின் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறும் சுருக்கமான அறிக்கை ஒன்றை அன்று மாலையே சாவர்க்கர் அவசரம் அவசரமாக வெளியிட்டார். காந்தியார் படுகொலை செய்யப்பட்டார் என்று வெளிவந்த  செய்தி பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறியிருந்த அவர், சுதந்திர இந்தியாவின் ஒன்றிய அரசின் பக்கம் ஆதரவாக நின்று, நாட்டில் ஒழுங்கு மற்றும் அமை தியை நிலை நாட்டுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

மிகப் பெரிய பேரடி

கோட்சேயைப் பொறுத்தவரை,  இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சாவர்க்கரின் அணுகுமுறை  மிகப் பெரிய பேரடியாக இருந்திருக்க வேண்டும். சாவர்க்கரை சந்தித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்தது முதல் கோட்சே அந்த இரு அமைப்பு களுக்கும் விசுவாசமானவராகவே இருந்து வந்து உள்ளார். இந்த இரு அமைப்புகளும்  இந்த விஷயத்தில்  தேவைப்படும்போது மேற்கொண்ட மாற்றம்,, தனது இதயத்தில் அவர்களைப் பற்றி  கோட்சே வைத்திருந்த மிக உயர்ந்த மதிப்பைப் பற்றியும் தோற்றத்தைப் பற்றியும் ஏமாற்றம் தருவதா கவும் திரித்துக் காட்டுவதாகவும் அமைந்து இருந்தது. எவருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதற்காக கோட்சே பெருமைப் பட்டுக் கொண்டிருந்தாரோ அவர்களால் அவர் கைவிடப்பட்டது, அதற்கு அடுத்து வரும் நாட்களில் அவருக்கு மோசமான துன்பங்களை அளிப்பதாக இருந்தது.

காந்திக் கொலை வழக்கு புலன் விசாரணைக்காக நாக்பூரில் நியமிக்கப்பட்ட  விசேட காவல் துறை கண்காணிப்பாளரான என்.பி. தாகூர்  குறிப்பாக கோட்சேயின் கடந்த கால வரலாற்றை சரிபார்ப்பதில் தனது கவனத்தைச் செலுத்தியதுடன், காந்தியாரின் படுகொலைக்குப் பிறகு டில்லி மற்றும் பம்பாய்க்கு வந்து சேர்ந்த பல  வதந்திகளையும் அவர் சரி பார்த் துக் கொண்டிருந்தார். நாக்பூரில் உள்ள ஆர்.ஸ்.எஸ். அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பரிசீலனை செய்த பிறகு தாகூரின் குழப்பங்களில் பெரும்பகுதியை நீக்கு வதாக அவை அமைந்திருந்தன. கோட்சே ஆர்.எஸ். எஸ். அமைப்புடன் எப்போதுமே தொடர்பு கொண் டிருக்கவில்லை என்று சங்கத்தின் தலைமை அறிவித்த உடனே அவரால் உருவாக்கப்பட்ட குழப்பங் கள்தான் இவை. இந்த ஆவணங்களைப் பரிசீலனை செய்ததன் மூலமும், தனது சுதந்திரமான விசாரணை களின் மூலமும்  தாகூர் ஒரு குறிப்பிட்ட தகவலை அறிந்து கொண்டார். இது பற்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் பரப்பப்பட்ட பொய்களைக் கண்டு பிடித்து, கோட்சேயின் கடந்த காலத்தைப் பற்றிய உண்மையை வெளிக் கொண்டு வர அவரால் முடிந்தது.

குற்றத்தை மெய்ப்பிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலக நோட்டுப் புத்தக பதிவுகளையே நம்பி இருக்க வேண்டியதாக இருந்தது. வழக்கு விசாரணை முன்னேற்றம் அடைந்து வரும்போது இது இன்னமும் தெளிவாகத் தெரிந்தது. தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரே வழி காந்தியாரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்க முடியாமல் தடுப்பது என்பதை கோட்சேயின் கூட்டாளிகள் நன்றாகவே அறிந்திருந்தனர்.

அப்போது கொலை செய்தது ஒரு தனிப்பட்ட மனிதரின் செயலாக பார்க்கப்படும். பண்டோபந்துக்கு சிறிது பணம் கொடுக்கப்பட்டதற்கான பதிவு இருந்தது. பின்னர் பிறழ் சாட்சியாக மாறிய திகம்பர் ராமச்சந்திர பாட்கே, பண்டோபந்த் என்பது பாட்கேயைக் குறிப்பதாகும் என்பதை தனது வாக்குமூலத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். விநாயக் ராம் என்னும் நானா ஆப்தேக்கும், கோபால் கோட்சேயுக்கும்  சிறிது பணம் கொடுக்கப் பட்டதற்கான வேறு பதிவுகளும் இருந்தன என்றும்  சிறிது பணத்தை நாதுராம் விநாயக் கோட்சே வைத்திருந்தார்  என்றும் கோபால் கோட்சே குறிப்பிட்டார். காந்தியாரின் கொலைக்கு ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டதை மெய்ப்பிக்கும்  முயற்சிக்கு இத்தகைய பதிவுகள் அரசு தரப்பு வழக்குரைஞருக்கு உதவி செய்யும் என்பதால் அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

நீதி மன்றத்துக்கு வெளியே தனிப்பட்டவர்கள் மேற்கொண்ட பேச்சுகளில் அவர் இழைத்த மோச மான குற்றத்துக்காக கோட்சே தாக்குதலுக்கு இலக்காக ஆக்கப்பட்டார். அந்த சூழ்நிலையில் தான் செய்த தவறினை திருத்திக் கொள்வதற்கு கோட்சேயுக்கு இருந்த ஒரே வழி, காந்தியாரைக் கொல்வதற்கு சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டது என்பதை தீவிரமாக மறுப்பது மட்டும்தான். உண்மையைக் கூறுவதானால்,  காந்தியாரைக் கொல்வது என்ற கருத்து தனது தனிப் பட்ட சொந்தக் கருத்து என்றும், தன்னுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவர் ஒருவராலும் அந்தக் கருத்து பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்றும் கோட்சே நீதிமன்றத்துக்கு கூறுவதாகவே அமைந்தது. அதுபோன்றதொரு வாதம் ஆப்தே மற்றும் சாவர்க் கரை மட்டுமன்றி, கோபால் கோட்சேயையும் காப் பாற்றுவதற்கு உதவும் என்று கருதப்பட்டது.

நன்றி: தி இந்து, 05-01-2022

தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment