பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி நாராயணசாமி இறுதி நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 28, 2022

பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி நாராயணசாமி இறுதி நிகழ்ச்சி

நெய்வேலி, ஜன. 28- பெரியார் பெருந்தொண்டர் கம்மா புரம் ஒன்றியம் மேனாள் தலைவர் நாராயணசாமி (வயது 85) கடந்த 23.1.2022 அன்று மறைவுற்றார்.

24.1.2022 அன்று அவரின் உடலுக்கு கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன் மண்டல தலை வர் அரங்க பன்னீர்செல் வம் மாவட்ட தலைவர் தண்டபாணி மாவட்ட அமைப்பாளர் மணிவேல் மாவட்ட செயலாளர் தென் சிவகுமார் கடலூர் நகர தலைவர் எழில் ஏந்தி பெரியார் நூலகர் கண் ணன் வடலூர் தலைவர் புலவர் ராவணன் மந்தா ரக்குப்பம் பாலகிருஷ்ணன்  வடலூர் நகர அமைப் பாளர் முருகன் இந்திரா நகர் தலைவர் பாஸ்கர் கடலூர் தமிழரசன் ஆகியோர் மாலையிட்டு வீரவணக்கம் செலுத்தி னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட் டது மாலை 3 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

தோழர்கள் அவரைப் பற்றிய நினைவுகளை பரிமாறிக்கொண்டனர் பெரியார் தொண்டர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப் படுகிறார்கள் என்று பேசியவர்கள் குறிப் பிட்டனர் நாராயணசாமி அவர்கள் பழக்கடை நாராயணசாமி என்றும் பூக்கடை நாராயணசாமி என்றும் அழைக்கப்பட் டார் கழகத் தலைவர் ஆசிரியர் மீது அளவற்ற அன்பு கொண்டவர் கட் டுப்பாடு மிக்க தோழர். அவரின் உடல் கடலூர் கூத்தப்பாக்கம் வள்ளலார் நகரிலிருந்து எரிவாயு தகன மேடைக்கு எடுத் துச் செல்லப்பட்டது அவரின் துணைவியார் மனோன்மணி, பிள்ளை கள், மருமகன்கள் மற்றும் தோழர்கள் வீரவணக்கம் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment