டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
67 ஆண்டுகளுக்கு பிறகு டாடா நிறுவனத்தின் வசமானது ஏர் இந்தியா: அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பு
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
இரு மொழிக் கொள்கையால் தமிழ் நாட்டு மாணவர் களுக்கு எந்த பின்னடைவும் ஏற்பட்டதில்லை - ஆளு நரின் பேச்சுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
அய்.ஏ.எஸ். விதிமுறை திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இப்பிரச்சினையை எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் முடிவு.
தி இந்து:
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு பதவி உயர் வில் இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு.
தி டெலிகிராப்:
அய்.ஏ.எஸ். விதிமுறை திருத்தம் - 109 மேனாள் அதிகாரிகள் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு
ஓய்வு பெற்ற 109 அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசுகளின் மீது கோபம் ஏற்படும் போது, அந்த மாநிலத்தின் முக்கிய அதிகாரிகளை ஒன்றிய அரசு குறி வைப்பதற்கு இந்த விதிமுறை திருத்தம் வழி வகுக்கும். இந்த சட்டத்தை ஒன்றிய அரசு தற்போது இருப்பது போல், சர்வாதிகாரத்துடன் முறைகேடு செய் யும். இது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் இந்த செயலை ஒன்றிய அரசு கைவிட வேண்டும், என கூறியுள்ளனர்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment