பள்ளி மாணவி சாவில் மதச்சாயம் பூசும் பி.ஜே.பிக்கு கண்டனம் தஞ்சையில் அனைத்துக் கட்சி மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 28, 2022

பள்ளி மாணவி சாவில் மதச்சாயம் பூசும் பி.ஜே.பிக்கு கண்டனம் தஞ்சையில் அனைத்துக் கட்சி மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜன. 28- தஞ்சை மாவட்டம், திருக் காட்டுப்பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை கொண்டதற்கு கட்டாய மதம் மாற்றம் தான் காரணம் என உண்மைக்கு மாறாக மதச்சாயம் பூசி அரசியல் ஆக்கி திசைதிருப்பி அரசியல் ஆதாயம் தேடும் பா.., மற்றும் பாசிச இந்துமதவாத அமைப்புகளை கண்டித் தும்  இறப்புக்கான உண்மையான கார ணத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்  இறந்த மாண வியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் 25.1.2022 அன்று மாலை 4.30 மணியள வில் தஞ்சை ரயில்நிலையம் எதிரில் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள  மதச் சார்பற்ற முற்போக்கு அனைத்து அரசி யல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் நீலமேகம் தலைமை வகித்தார்

கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்டத் தலை வர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன், மாநகரத் தலைவர் .நரேந்திரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி யன்,  மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன், கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் உள்ளிட்ட கழக தோழர்கள்  மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் சின்னை பாண்டியன், இந்திய கம் யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து, உத்திராபதி, காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட துணைத் தலைவர் வயலூர் இராமநாதன், மக்கள் அதி காரம் காளியப்பன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனா வரம் முருகேசன், மதி.மு. மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், அய்.ஜே.கே. மாவட்டத் தலைவர் சிமியோன் சேவி யர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுலாப்தீன், வி.சி. மாவட்ட செயலாளர் சொக்கா ரவி, இந்திய மாணவர் சங்க அரவிந்த சாமி, மக்கள் நீதி மய்யம் தரும சரவணன், பெரியார் உணர்வாளர்கள் கூட்ட மைப்பு பழனிராஜன் ஆசிரியர்கள் சார்பில் ராணி உள்ளிட்போர் கண்டன உரையாற்றினார்கள். இந்திய விவசாய சங்க மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்று ஒருங்கிணைத்து நடத்தினர்.  மார்க்சிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் வடிவேலன் நன்றி கூறினார். 

திரளான பொதுமக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தந்தனர்.

No comments:

Post a Comment