ஈரோடு, ஜன. 28- சட்டமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு தந்தைபெரியார் பிறந்த ஊரான ஈரோட்டில் சிலை வைக்க பல்லாண்டு காலமாக பல்வேறு அமைப் புகள் முயற்சி செய்து வந்தனர்.
தனித்தனி குழுவாக போராடி வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பாக திராவி டர் கழக மாநில அமைப் புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் 28 அமைப்புக்கள் ஒன்றி ணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மேனாள் முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள் ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்கள் பொறுப்பா ளர்கள் என ஈரோட்டிற்கு வருகை புரிந்த அனைத் துக் கட்சி தலைவர்களி டம், மாவட்ட நிர்வாகம் என அனைத்து வழிகளிலும் சிலை வைக்க கோரிக்கை வைத்து முழு முயற்சியு டன் ஈடுபட்டனர்.
கடந்த ஆட்சியில் சிலை நிறுவ ஆர்வம் காட்டாத நிலையில், புதிய ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப் பேற்றதும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பதிவியேற்ற சு.முத்துச்சாமி அவர்கள் பெரும் கவனம் எடுத்துக்கொண்டு திரா விடர் கழக அமைப்புச் செய லாளர் ஈரோடு த.சண்மு கம் தலைமையிலான புரட் சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்புக் குழுவிடம் பல கட்ட ஆலோசனை கள் நடத்தி தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத் திற்கு கொண்டு சென்று அனுமதி பெற பெரிதும் முயற்சி செய்து வெற்றியும் கண்டார். தமிழ்நாடு முத லமைச்சரும் கடந்த ஆண்டு ஈரோட்டிற்கு எதிர்கட்சி தலைவராக இருந்த போது சிலை அமைப்புக் குழுவி டம் ஆட்சிப் பொறுப்பேற் றால் நிச்சயமாக சிலை வைக்கப்படும் என்ற வாக் குறுதியை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் மற் றும் அரசு உயர் அதிகாரி களுடன் ஆலோசித்து கடந்த 22ஆம் தேதி அனுமதி வழங்கினார்.
மாவட்டத்தில் முதல்முறையாக...
உடனடியாக அமைச் சர் சு.முத்துச்சாமி அவர் கள் அய்தராபாத்தில் உள்ள மிக சிறந்த சிலை வடிவமைப்பு நிறுவனத் தில் சிலை ஏற்பாடு செய்து உடனடியாக ஈரோட்டு தந்தை பெரியார் அறிஞர் அண்ணா தலைவர் கலை ஞர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் உள்ள பன்னீர் செல்வம் பூங்காவில் உரிய இடத்தை தேர்வு செய்து சிலை அமைப்பு குழுவினர்களு டன் ஆலோசனை செய்து 25ஆம் தேதி இரவு முழு வதும் திராவிடர் கழக மாநில அமைப்பு செயலா ளர் ஈரோடு.த.சண்முகம், மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் தோழர்களுடன் இருந்து சிலை வைக்கப்பட்ட பின் னர் 26ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச் சர் சு.முத்துச்சாமி தலை மையில் நடைபெற்ற விழா வில் காணொலி மூலம் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையை திறந்து வைத்து ஈரோடு மாவட்ட மக்க ளின் நீண்ட நாள் கோரிக் கையை நிறைவேற்றினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
சமூக நீதிக்கான பயணத்தில்...
அண்ணல் அம்பேத் கர் சிலை பலமுறை முயற்சி செய்தும், போரட்டங்கள் நடந்தியும் முந்தைய அதிமுக ஆட்சி அதைக் கண்டுகொள்ளவேயில்லை. இது சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருமளவுக்குச் சென்றது. இந்நிலையில், இந்த ஆட்சியில் எவ்வித போராட்டங்கள் இன்றி அனைத்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்ப ளித்து சிலை வைக்க அனுமதி வழங்கிய தமிழ் நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாய கர் மு.க.ஸ்டாலின், அமைச் சர் சு.முத்துச்சாமி ஆகி யோரின் சமுக நீதிக்கான பயணத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு குழு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர். வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்களின் சமுக நீதிக் கான பயணத்தில் திராவி டர் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, திராவிடப் பேரவை எப் போதும் துணை நிற்கும் என அமைச்சர் அவர்க ளிடம் பொறுப்பாளர்கள் உறுதி கூறினர்.
No comments:
Post a Comment