புதுடில்லி, ஜன. 28- தமிழ்நாட் டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க கூடுதல் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணை யம் மனு தாக்கல் செய்து உள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப் புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கையை தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று முன் தினம் வெளியிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர் தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு நேற் றுடன் நிறைவடைந்த நிலையில், 40 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்குரைஞர் கே.கிருஷ்ணகுமார் மனு தாக்கல் செய்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டு நடத்த முடியாமல் போன தற்கு வடகிழக்கு பருவ மழை வெள்ளம், டிசம்பர் இறுதியில் நிறைவுற்ற வார்டு மறுவரை பணி கள், புதிதாக உருவாக்கப் பட்ட மாநகராட்சிகளில் இட ஒதுக்கீடு நடை முறைகள், தமிழ்நாட்டில் மூன்றாவது கரோனா அலையால் இரவு நேர மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் அமல்படுத்தப் பட்ட முழு ஊரடங்கு, தேர்தல் பணியாளர்களை நியமிப்பதில் ஏற்பட்ட தொய்வு போன்ற கார ணங்களால் நகர்ப்புற தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டிருப்ப தையும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கை ஜன வரி 26ஆம் தேதி வெளியிட்டிருப்பதையும் சுட் டிக்காட்டியுள்ளது.
இதைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பணிகளை நிறைவு செய்ய மேலும் 40 நாட்கள் அவகாசத்தை அளிக்குமாறும் அந்த மனு வில் கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment