'நீட்' தேர்வு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதாக உள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

'நீட்' தேர்வு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதாக உள்ளது

செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை,ஜன.8- 'நீட்' தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக் கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் இன்று  (8.1.2022) காலை நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் களிடம் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய தாவது:  மாநில அரசு நிதியில் இருந்து நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை ஒன்றிய அரசு பறித்து விட்டது.

நீட் தேர்வு 12 ஆண்டு கால பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக்குகிறது.  மாணவர்களின் 12 ஆண்டு கால பள்ளிக் கல்வியால் எந்தப் பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்குகிறது. நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதாக உள்ளது.  அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்தையும் சீரழிப்பதாக உள்ளது. 'நீட்' தேர்வுக்கு விலக்கு குறித்து சட்டப் வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். 

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment