சிறுபான்மை மத மக்கள் மீது வெறுப்பைத் தூண்டிவிடும் பேச்சுக்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

சிறுபான்மை மத மக்கள் மீது வெறுப்பைத் தூண்டிவிடும் பேச்சுக்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

 வசுந்தரா சிர்நேட் டிரென்னன்

Vasundhara Sirnate Drennan

வெறுப்புணர்வைத் தூண்டும் மாநாட்டின் பேச்சுகள்

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் 17 முதல் 19 தேதிகள் வரை ஒரு தீவிரவாத ஹிந்து மத மாநாடு அரித்துவார் மற்றும் உத்தராகண்டில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பேச்சாளர்கள் சிறுபான்மை மத மக்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டிவிடும் பேச்சை மிகமிக உயர்ந்த குரலில் பேசினர்.  தஸ்னா தேவி கோவிலின் தலைமை பூசாரியும்,  ஜூனா அகாரா என்ற ஹிந்து மதப் பிரிவு ஒன்றின் மிக உயர்ந்த பதவி ஒன்றை வகிப்பவருமான யதி நரசிங் கானந்த் சரஸ்வதி என்பவரால் ஏற்பாடு செய்து இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்தியாவுக்கும், ஹிந்து மதத் தினருக்கும் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தலாக விளங்கு கின்றனர் என்ற பொய்யான கற்பனை வாதத்தை பல பேச்சாளர்களும் இந்த மாநாட்டில் எழுப்பினர்.

ஒரு வலது சாரி அமைப்பான ஹிந்து ரட்ச சேனா என்ற அமைப்பின் தலைவர் சாமியார் பிரபோனாந்த் கிரி தனது பேச்சின்போது, டில்லி நகரின் எல்லையில் நீங்கள் இதனைப் பார்த்தீர்கள். அவர்கள் ஹிந்துக்களைக் கொன்று தூக்கிலிட்டனர்.  இனியும் நாம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இப்போது உங்கள் முன் உள்ள பிரச்சினையே ஒன்று இப்போது நீங்கள் இறப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும் அல்லது எதிரிகளைக் கொல்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதனால்தான் மியான்மரில் நடந்தது போல,  இங்குள்ள ஒவ்வொரு காவல் துறை அதிகாரியும், ராணுவ வீரரும், ஹிந்துக்களும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு,  நமது நாட்டை தூய்மைப்படுத்தும் இந்தப் பணியை நாம் மேற்கொள்ளவேண்டும் என்று கூறுகிறோம். இதனைத் தவிர வேறு வழியே நமக்கு இல்லை  என்று பேசி யிருக்கிறார். அவரைப் போலவே வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சை திரும்பப் பேசிய யதி நரசிங்கானந்த் என்பவர் (தமிழ் ஈழ விடுதலை அமைப்பின் தலை வரான பிரபாகரனைப் போல)  கொதித்து எழுந்து வரும்  எந்த ஒரு ஹிந்து இளைஞருக்கும் ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பதற்கு முன் வந்திருப்பதாக, வன் முறைச் செயலைத் தூண்டும் வகையில் அறிவித்தார். ஹிந்து வலதுசாரி அமைப்பு ஒன்றின் தலைவரான சாமி தர்ஷன் பாரதி உத்தராகண்ட் மாநிலத்தில் முஸ்லிம்கள் நிலம் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அரித்துவாரா  மாநாட்டில் பேசிய வெறுப்பைத் தூண்டும் இந்த சொற்களை மேலும் பெரிதுபடுத்தி பேசுவதற்கு நான் விரும்பவில்லை. அதற்கு மாறாக சில சிந்தனைகளின் தொகுப்பை அளிக்கவே நான் விரும்புகிறேன். இத்தகைய நடைமுறைகள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றி நாம் எவ்வாறு சிந்திக்கவேண்டும்.

ஒட்டு மொத்த மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் மாநாட்டின் பேச்சுகள்

இன்று இந்திய சமூகத்தில் பைத்தியக்காரத்தனமான நியாயமற்ற தன்மை ஒன்று மிகுந்த கவனத்துடன் விதைக்கப்பட்டுள்ளது. வெறுப்புணர்வு மிகுந்த சொற்கள் அனைத்து குடிமக்களின் உரிமைகள் மற்றும் நல் வாழ்வையும் பாதிப்பவையாகும். இந்த நடை முறையில் ஹிந்துத்துவக் கோட்பாட்டாளர்கள் சிறு பான்மை மதக் குழுக்களுக்கு எதிராக வெறுப்பை உண்டாக்கி அவர்களை அச்சுறுத்தும் இத்தகைய பேச்சுகளை தொடர்ந்தும், திரும்பத் திரும்பவும் பேசவேண்டும். தங்களைப் போன்ற மனிதர்களாக இல்லாத முஸ்லிம்களிடமிருந்து ஹிந்துக்களுக்கு உடனடியான அச்சுறுத்தல் எழுந்துள்ளது என்று ஹிந்து மக்களை நம்பச் செய்யும் நோக்கத்துடன் கூடிய ஒரு கலாச்சாரக் கோட்பாட்டை ஒட்டு மொத்த ஹிந்து மக்களிடையே பரப்பும் நோக்கம் கொண்டது இது. அவ்வாறு செய்யும்போது, உண்மையில் இல்லாத, சரிபார்க்கப்படாத ஓர் அச்சுறுத்தல் உருவாக்கப் பட்டு மக்கள் முன் வைக்கப்படுகிறது. அரித்துவார் மாநாட்டில் பேசிய பேச்சாளர்கள் எல்லாம், முஸ்லிம்களால்  கைப்பற்றிக் கொள்ளப்படும் அச்சுறுத்தலுக்கு இந்தியா உள்ளாகியிருக்கிறது   என்பதால்,  அனைத்து முஸ்லிம் மக்களும் வெறுப்புடனும், சந்தேகத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பது போன்றதொரு  சித்திரத்தைத் தீட்டிக் காட்டினர்.  பின்னர் இத்தகைய வெறுப்பு பேச்சை பேசியவர்கள் அதற்கான ஒரு தீர்வையும் அளித்தனர் - தங்களின் சுயபாதுகாப்புக்காக அனைத்து முஸ்லிம் களுக்கும் எதிராக ஹிந்துக்கள் ஆயுதங்கள் ஏந்த வேண்டும்  என்பதுதான் அந்தத் தீர்வு.  இவ்வாறு முஸ் லிம்களைப் படுகொலை செய்வதற்காக கற்பனையிலான தொரு காரணத்தை தங்களது தொண்டர்களின் மனங் களில் தெளிவாகப் பதியும் அளவுக்கு அடிக்கோடிட்டுக் காட்டிய அவர்கள் முஸ்லிம்களைப் படுகொலை செய்வதற்கான அழைப்பை விடுத்தனர்.

இரண்டாவதாக,  பெரும்பான்மையான ஹிந்து மக்கள் ஆயுதங்கள் ஏந்தி முஸ்லிம்களைப் படுகொலை செய்யவேண்டும் என்று விடுக்கப்பட்ட ஆபத்து நிறைந்த, தவிர்க்க இயலாத  அழைப்பு இவ்வளவு தெளிவாக விடுக்கப்பட்டிருக்கும்போதும், பேச்சாளர் களின் பேச்சுக்களில் இருந்து வெறுப்புப் பேச்சைப் பிரித்துக் காட்டி அவர்கள் மீது குற்றம் சாட்டுவது என்பது ஏன் இந்தியாவில் மிகவும் கடினமானதாக இருக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இத்தகைய வெறுப்பு நிறைந்த பேச்சுகள் மக்களுக்கு உயிரிழப்பையும், படுகாயங்களையும்,  கவுரவ இழப் பையும், ஏற்படுத்த இயன்ற  தாக்குதல்களுக்கு இலக்கான குழுக்களின் மக்களது உரிமைகளைப் பறிப்பவையாக இருந்த போதிலும், இந்தியாவின் கொள்கைகளை வடிவமைக்கும் ஆட்சியாளர்கள் இன்னமும் அதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டு அங்கீகரிக்காமல் ஏன் இருக்கிறார்கள்?

வேறுபாடு அற்றது

வெறுப்பைத் தூண்டிவிடும் பேச்சுக்கும், அச்சத்தை ஏற்படுத்தும் பேச்சுக்கும் இடையே இந்தியாவில் நாம் எந்த வித வேறுபாட்டையும் காண்பதில்லை. அச்சத்தை ஏற்படுத்தும் பேச்சு என்னும் எரிபொருளில்  முதலில் நனைக்கப்பட்டுவிட்டால், எந்த சமூகத்துக்கு எதிராகவும் அச்சுறுத்தும் வகையில் தவறாகவும், வன்முறை கோபதாபங்களைத் தூண்டும் வகையிலும் பேசப்படும் வெறுப்புப் பேச்சு,  பொது மக்களிடையே மிக நன் றாகவே வேலை செய்யும். சோதித்து பார்க்கப் படாத,  முன்னர் அறிந்திராத தனிப்பட்ட ஓர் அச்சத்தையும், பீதியையும் மனிதர்களிடையே ஏற்படுத்துபவை இந்த அச்சுறுத்தும் பேச்சுக்கள். வேண்டுமென்றே அது குழப்பம் மிகுந்ததாக விடப்படுவதாகும். இதற்கு ஒரு சரியான எடுத்துக் காட்டாக 1980களில் அமெரிக்காவில் பரப்பப்பட்ட  சைத்தான் பீதியைக் கூறலாம். குழந் தைகளை பலி கொடுப்பது என்ற போலியான சைத்தான் கலாச்சாரம் அமெரிக்காவில் பரவி பொது மக்களிடையே ஆழமான பரவலான அச்ச உணர்வை ஏற்படுத்தியது.

இந்தியாவில், ஹிந்துக்கள் முஸ்லிம்களின் அச் சுறுத்தலின் கீழ் இருக்கிறார்கள் என்று இந்துத்துவக் கோட்பாட்டாளர்கள் கூறும்போது, அவர்கள் ஒட்டு மொத்த அச்சத்தையும் பீதியையும் மக்களிடத்திலே உருவாக்குகிறார்கள். கடந்த காலத்தில் ஹிந்து சமூகம் மீது இழைக்கப்பட்ட எந்த ஒரு கொடுமையைப் பற்றியும் அவர்கள் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டே இருப்பார்கள். அதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு உணர்ச்சியை ஹிந்துக்களிடம் அவர்கள் தூண்டிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். பொருளாதார, சமூக, அரசியல் சமத்துவமின்மையும்,  நிச்சயமற்ற சூழ்நிலையும் சமூகத்தில்  நிலவும்போது, இத்தகைய பேச்சுகள் ஹிந்து மக்களை மிகப் பெரிய அளவில் கவர்கிறது. மக்களை ஊக்கப்படுத்தும் இத்தகைய பேச்சுகள் செய்வதென்னவோ மிகமிக எளிதான ஒரு விஷயத்தைத்தான். முஸ்லிம்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ஒரு நிலையை ஹிந்து மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். நடுநிலை வகிப்பது என்று இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

இந்திய அரசியல் களத்தில் இருந்து வன்முறை மூலம் முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவது என்ற ஒரு முடிவான இலக்கை நோக்கியே இத்தகைய அச்சுறுத்தும் பேச்சுகளும் வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளும் அமைந்துள்ளன. தேர்தல் வெற்றி பெறுவதற்காக தன்னைச் சுற்றி ஒரு ஹிந்து மத ஆதரவு அடை யாளத்தை பா...  உருவாக்கிக் கொண்டதுடன், நாள டைவில்  ஹிந்து மதத் தலைவர்களின் தீவிரவாதம் எழுச்சி பெறுவதற்கான உதவிகள் அனைத்தையும் அத் தகைய தலைவர்களுக்கு அளித்து வருகிறது. அவர்கள் அனைவரும் அவர்களுக்கும் பா..கட்சிக்கும் பயன ளிக்கும் மத சூத்திரத்தைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.

ஒரு மாற்றமும் ஆதரவும்

சிறுசிறு தொகுப்புகளால் ஆன சில்லறை குழுக் களாக  இருந்த  இந்துத்துவக் கோட்பாட்டு அமைப்புகள் நாட்டில் பலமாக வேர் ஊன்றி, தேர்தல் மூலம் அரசு அமைப்புகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளன. இந்திய அரசு அமைப்புகள் காவிக் கட்சியால் கைப்பற்றப்பட்டது மிகமிக முக்கிய மான நிகழ்ச்சியாகும். அதனால்தான் சாமியார் பிரபோ தானந்தாவினால், இந்தியாவை முஸ்லிம்கள் அற்ற தூய்மையான நாடாக ஆக்குவதைப்பற்றி பேச முடிகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், தங்களுக்கு ஆளும் கட்சி மற்றும் அரசின் அமைப்புகள் அனைத்தும் ஆதரவாக இருப்பதைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள். தற்போது உள்ள சட்டங்களின்படி தங்களது வன்முறைச் செயல்களைத் தூண்டும் பேச்சு மற்றும் செயலுக்காக  குற்றம் சாட்டி தங்களுக்கு தண்டனை வழங்கமுடியாது என்பதை மிக நிச்சயமாக அவர்கள் அறிந்துள்ளனர். முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டும் இத்தகைய பேச்சைப் பின்பற்றி தங்களது தொண்டர்கள் வன்முறைத் செயல்களில் இறங் குவார்கள் என்று திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் நன்றாகவே புரிந்து கொண்டுமிருக் கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை செயல் களில் ஈடுபடுவதற்கு தொண்டர்களுக்கு இருந்த தடைகளை இத்தகைய வெறுப்பைத் தூண்டும் பேச்சு குறைத்துவிடும் என்பதையும் அவர்கள் அறிந்துள்ளனர்.

அஸ்வினி உபாத்தியாயா, உதிதா தியாகி ஆகிய பா...வின் மகளிர் மோர்ச்சா அமைப்பின் இரண்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த அரித்துவார் மாநாட்டின் நிகழ்ச்சிகளும், பேச்சுகளும். இந்திய அரசமைப்பு சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கும் குடிமக்களின் உரிமைகளை நேரடியாக மீறுவதாக அமைந்துள்ளன. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் போர் (சிப்பாய் கலவரம்) போன்ற கலவரங்கள் டில்லி, உத்தராகண்ட், உத்தரப்பிரதேசத்தில் ஏற்படும் என்றும்,  ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள் வன்முறை செயல்களைத் தூண்டிவிடுவார்கள் என்றும் மாநாட்டுப் பேச்சாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

அதனால்தான் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங் குடியின மக்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 10,000 முஸ்லிம்களை பொய் வழக்குகளில் சிக்கவைப்பது பற்றி மாநாட்டுப் பேச்சாளர்களில் ஒருவ ரான சிந்து சாகர் சாமியார் தம்பட்டம் அடித்துக் கொண் டார். இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் பல பிரிவுகளின்படி  இவை அனைத்துமே தண்டிக்கத் தக்க குற்றங்களாகும்.

2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தொடக்கம்

வழிபாட்டில் ஈடுபடும் சிறுபான்மை மதக் குழுக்கள் மீதும், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் அகண்டதொரு சூழ் நிலையில்,  இந்த அரித்துவார் மாநாடு நடந்தேறியுள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாகும். அதற்கான வழிமுறையும், தொனியும் 2014 ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. அண்டை நாடுகளில் இருப்பது போல இந்தியாவிற்கும் ஒரு பெரும்பான்மை மத அரசு என்ற தோற்றத்தைத் தரும் அளவில் மாற்றுவதற்கு  சாதாரணமான ஹிந்து  குடிமக்களை இப்போதுள்ள இந்திய அரசு பயன்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

அரித்துவார் மாநாட்டில் கூடிய தங்களுக்குத் தாங்களே அதிகாரம் அளித்துக் கொண்ட ஹிந்து மதத் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்துபவர்கள் ஆவர். உள்நாட்டிலும், உலக அரங்கிலும் இத்தகைய வன்முறைச் செயல்களில் தங்களுக்கு எந்த வித பங்கும் இல்லை என்று மறுப்பதற்கு இயன்ற அளவுக்கு இத்தகைய வன்முறைச் செயல்பாடுகளில் இருந்து விலகியிருப்பது போன்ற தோற்றத்தை  பா..கட்சிக்கு ஏற்படுத்துவதே அவர்கள் திட்டம். இந்தியாவுக்கு இது ஒரு மிகமிக ஆபத்தான வழியாகும். வெகுஜன மக்களின் அரசியல் மற்றும் தீவிரமாற்றங்கள் ஆகியவை  ஆட்சி அதிகாரத்துடன் வருபவை அல்ல என்பதே இதன் காரணம்.

கற்பனையிலான தங்களது உள்நாட்டு எதிரிகளாகிய முஸ்லிம்களின் - கற்பனையிலான தேசவிரோத செயல் பாடுகளைத் தடுப்பதற்கு ஹிந்து தீவிரவாதிகளால் மேற் கொள்ளப்பட இருக்கிற வன்முறை செயல்பாடுகளை ஆட்சியில் உள்ளவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நன்றி: 'தி இந்து' 30-12-2021

தமிழில்: .. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment