சிறுவர்கள்மீது துப்பாக்கிச் சூடு பா.ஜ.க. அமைச்சர் மகனின் ஆணவம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 27, 2022

சிறுவர்கள்மீது துப்பாக்கிச் சூடு பா.ஜ.க. அமைச்சர் மகனின் ஆணவம்

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கண்டனம்

சம்பரன், ஜன.27- பீகார் மாநி லத்தில் பாஜகவைச் சேர்ந்த நாராயண் பிரசாத் என்பவர் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார். அவருக்கு சொந்தமான இடத்தில்  விளை யாடிக் கொண்டிருந்த சிறுவர் கள்மீது அவர் மகன் பப்லு குமார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.

இவர்களுக்கு சொந்தமாக பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ஹர்டியா கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ளூர் சிறுவர்கள் விளையாடி வந்ததாக கூறப்படு கிறது.

இந்நிலையில், தங்கள் இடத் தில் சிறுவர்கள் விளையாடுவதா? என்று ஆத்திரம் அடைந்த அமைச் சர் நாராயண் பிரசாத்தின் மகன் பப்லு குமார் சிறுவர்களைக் கடுமையாகப் பேசியபடி அவர் களை நோக்கி திடீரென துப் பாக்கியால் சுட்டுள்ளார். துப் பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் சிலர் காயம் அடைந் தனர்.  தகவலறிந்த கிராம மக்கள், அமைச்சரின் வீட்டுக்குச் சென்று, அவரது காரை அடித்து நொறுக்கிய துடன்,  பப்லு வையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. காவல் துறையினர் நிகழ்விடத் துக்குச் சென்று பொதுமக்களை அமைதிப்படுத்தியுள்ளனர்.

கண்டனம்

சிறுவர்கள் மீது அமைச்சரின் மகன் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் சக்தி சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 பீகாரில் சட்டம் - ஒழுங்கு என்பதே இல்லை. சட்டத்தை இயற்று பவர்களே சட்டத்தை மீறு கின்றனர். கிரிக்கெட் விளையாடும் குழந்தை களை தாக்க அமைச்சரின் மகனுக்கு யார் உரிமை தந்தது? சட்டத்தை இயற்றுபவர்கள் சட் டத்தை மீறும் போது மாநிலத்தில் யார் சட்டத்தை அமல்படுத்து வார்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், “கிராம மக்கள் எனது நிலத்தை அபகரிக்க முயன்றனர். எனது குடும்பத்தி னரை தாக்கினர். அதை தடுப்ப தற்காகவே, எனது மகன் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அவ ரையும் பொதுமக்கள் கற்க ளால் தாக்கியுள்ளனர். எனது வாக னத்தையும் சேதப்படுத்தியுள்ளனர் என்று அமைச்சர் நாராயண் பிரசாத், கிராம மக்கள் மீதே குற்றச் சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.

No comments:

Post a Comment