உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமூக அளவில் உருவாக்கப்பட்ட ஜாதிக் கோட்டையின் சுவர்களில் விரிசல்கள் காணப்படுகின்றன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 31, 2022

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமூக அளவில் உருவாக்கப்பட்ட ஜாதிக் கோட்டையின் சுவர்களில் விரிசல்கள் காணப்படுகின்றன

ஊர்மிலேஷ்

விரைவில் நடைபெற உள்ள அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் மட்டுமே மிகுந்த கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. பா..கட்சியும், அதன் அரசும், 20 சதவிகித அளவில் வெற்றி பெற இயன்ற எதிர்கட்சிகளை வென்று  80 சதவிகித அளவில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று .பி. மாநில முதல் அமைச்சர் சாமியார் யோகி அண் மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில்  நம் பிக்கை தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியிருப்பதன் நோக்கம், தேர்தலில் வெற்றி பெறுவ தற்காக  ஜாதி  மத அடிப்படையில்  மக்களிடையே பிளவை ஏற்படுத்தி தேர்தலை நடத்துவது என்ற அவரது நோக்கம் மிகவும் தெளிவாகவே தெரிகிறது. முரண்பட்ட அவரது இந்த அறிக்கை அரசியலில் மிகப் பெரிய அளவிலான சூட்டைக் கிளப்பியுள்ளது. ஆனால் சாமியார் யோகியோ அதற்கு முற்றிலும் மாறுபட்ட விளக்கம் ஒன்றை அளிப்பதற்கு முயன் றுள்ளார். மக்களிடையே மத, ஜாதி அடிப்படையில் பிளவை ஏற்படுத்துவதுடன், பா... மற்றும் ராஷ் டிரிய சுயம் சேவக் அமைப்பும் ஜாதி அடிப்படையில் தாங்கள் பிளவுபடுத்தியுள்ள தங்களது சமூக அரசியலில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றன.

புகழ் பெற்ற அவர்களது ஜாதி அடிப்படையிலான சமூக அரசியல் கோட்டைச் சுவர்களில் அண்மைக் காலங்களில்  ஏற்பட்டுள்ள விரிசல்கள் எதிர்பாராத ஒன்றாகும். பா... தலைவர் தரம் சிங் சைனி,  மூத்த அமைச்சர் சாமி பிரசாத் மயூரா உள்ளிட்ட பல அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பா.. கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சமாஜ்வாதி கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.  மேலும் பல பா... தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகுவார்கள் என்று மிகப் பெரிய அளவில் நம்பப் படுகிறது. அவர்களில் பலரும், யாதவர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். மிகப் பெரிய அளவில் இந்த பதவி விலகல்கள் ஏற்பட்டுள்ளன என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

அண்மைக் காலத்தில் நடைபெற்ற பெரும்பான் மையான தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சி பா...  அது மட்டுமன்றி, பலமான பொருளாதார, அமைப்பு ஆணி வேர்களைக் கொண்ட கட்சியாகவும் விளங்குவது அது.  உத்தரப்பிரதேச மாநிலம்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பரிசோதனைச் சாலை என்று கடந்த அய்ந்து ஆண்டுகளாக சொல்லப்பட்டு வரவில்லையா? நரேந்திர மோடிக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு வருவதற்கு  மிகவும் தகுதி வாய்ந்த உயர் மட்டத் தலைவர்கள் மற்றும் உத்தியாளர்களில் சாமியார் யோகியும் ஒருவர் என்று கருதப்படுகிறது.

அதிகார பூர்வமற்ற முறையில் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த போது  ஒரு நுண்ணறிவாளர், இந்திய அரசமைப்பு சட்டம் மாற்றப்படுகிறதோ இல்லையோ, சாமியார் யோகி பிரதமராக வந்தால்,  அவருடைய காவி உடை, ஹிந்துத்துவக் கோட் பாட்டில் அசைக்கமுடியாத அவரது நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு  காரணமாக இந் தியாவை ஹிந்து ராஷ்டிரா என்று தாராளமாக அழைக்கலாம் என்று என்னிடம் கூறினார். அத் தகைய யோகி மகராஜ் ஆட்சியின் கீழ் இருந்துதான் இப்போது அவரது அமைச்சரவை  அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கும்பல் கும்பலாக பா... வில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பதுடன், மேலும்  பலர் விலகிச் செல்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்ட பிரிவு வகுப்புகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும், அமைச்சர்களின் இந்த புரட்சிபற்றி ஒன்றிய மாநில செய்தி ஊடகங்களைத் தவிர ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணையதளத்தில் எந்த வித சலனமும் ஏற்படவில்லை என்பது மிகவும் வியப்பளிப்பதாக இருக்கிறது. இதிலிருந்து எழும் முக்கியமான கேள்விகள் : தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பும் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் படாததனால் ஏற்பட்டுள்ள, தேர்தலுக்கு முன்பு வழக்கமாக ஏற்படும்  புரட்சியா இது? அல்லது வேறு ஏதோ ஒரு ஆழ்ந்த செய்திக்கான அறிகுறியா இது? உத்தரப்பிரதேசத்தில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களிடையே இருந்த பா... - ஆர்.எஸ்.எஸ். சமூக அடித்தளம் சிதைந்து போய்க் கொண்டி ருக்கிறதா?

மண்டலில் இருந்து கமண்டலம் வரை

மத்திய பிரதேசம், குஜராத் போன்ற ஒரு பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும் கூட, பெரும் பாலான இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களை, மண்டல் அரசியலில் இருந்து கமண்டல் (இந்துத்துவ) அரசியலுக்கு கொண்டு வர முடிந்தது என்று சங் மற்றும் பா... உத்தியாளர்கள் அவ்வப்போது தம்பட்டம் அடித்துக் கொண்டு இருந்து வந்துள்ளனர். அது உண்மையாக இருந்தால்,  தேர்தலில் சாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி போன்ற தலைவர்கள் போட்டியிடுவதற்கோ, அல்லது அவர்களது ஆதர வாளர்கள் போட்டியிடுவதற்கோ அனுமதி கிடைப் பதில் ஏதும் பிரச்சினை இல்லாத நிலையில், கட்சிக்கு எதிராக புரட்சி செய்துள்ளதற்கு எத்தகைய விளக்கத்தை அளிக்க முடியும்?

சாமி பிரசாத் மவுரியாவுடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டவரும், அவருடன் ஒரே சமூகப் பின்னணியில் வந்தவருமான லக்னோவில் பணியாற்றும் எழுத்தாள நண்பர் ஒருவர் அமைச்சரின் அரசியல் மனநிலையைப் பற்றி நான் கேட்டபோது, மவுரியா இன்னமும் அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற நிகழ்வைப் பற்றி, மவுரியா பா...வில் சேர்ந்த பிறகு நான் சென்று அவரை சந்திக்கும் வழக்கத்தை நிறுத்திக் கொண்டேன்.  தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டபோதெல்லாம்,  ஹிந்துத்துவக் கட்சியில் அவர் நீடிக்கும் வரை, அவருடன் தொடர்பு வைத்துக் கொள்வது என்பது எளிதாக இராது என்று நான் கூறிவிடுவேன். இத்தகைய தலைவர்கள் எல்லாம் எவ்வாறு நம்பிக்கைக்குத் தகுதி அற்றவர்களாகவும்,  அவர்களது சமூகத்தின் அடித்தளத்திலேயே புகழ் பெறாதவர்களாகவும் ஆகிவிட்டனர் என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு சான்றாகும். கடந்த அய்ந்து முதல் ஏழு ஆண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இடையே, குறிப்பாக பொருளாதார மற்றும் சமூக களங்களிலும், கல்வி அரசுப் பணி நியமனங்களிலும்,  நியாயமான பங்கு வேண்டும் என்ற கேள்வி வரும்போது, மதச் சார் பின்மைக்கு எதிரான இந்துத்துவ அரசியல்  மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது. ஆனால்,  இந்த  உண்மை நிலையை அறிந்து புரிந்து கொள்ளவோ, அதனைத் தீர்க்கவோ பா...வின் உயர் மட்டத் தலைவர்கள் தயாராக இல்லை.

பிரதமரின்  சரளமான பேச்சும்,   திறமை வாய்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா...வின் பண பலமும், அதன் தேர்தல் மேலாண்மைத் திறனும் கட்சியில் இருக்கும் குறைபாடுகளை சரி செய்துவிடும் என்றே அவர்கள் கருதி வந்துள்ளனர். ஆனால் இப்போது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவர்கள் கும்பல் கும்பலாக கட்சியை விட்டு விலகிச் செல்வதைக் காணும் பா...வின் தலைமை கவலையும் அதிர்ச் சியும் அடைந்துள்ளது.

பா...வின் புகழ் மங்குவதன் பின்னணி

உத்தரப் பிரதேச மாநில இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரிடையே, பா...வின் இந்துத்துவ அரசியல் பற்றிய கவர்ச்சி படிப்படியாக மங்கிக் கொண்டே வந்திருக்கிறது என்பதே எனது மதிப்பீடு ஆகும். முதலாவதாக,  பயன் நிறைந்த முறையில் அதிகாரம் பெற்ற இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவர் எவர் ஒருவரும் ஒன்றிய அரசில் இல்லை. உத்தரப் பிரதேச அரசிலும்கூட அத்தகைய தலைவர் ஒருவரும் இல்லை. சாமியார் யோகி தலைமையில் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மயூராவுக்கு அரசின் செயல்பாடுகளில் எந்தவித முக்கியத்துவமும் அளிக் கப்படாததுடன், மயூராவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை பயன் மிகுந்த வகையில் முதல மைச்சர் தொடர்பு கொண்டிருக்கவில்லை. மதவெறி பிரச்சாரம் செய்வதற்கு மட்டுமே அவர் பா...யினால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளார்.  ஒரு கால கட்டத்தில் மயூரா தன்னை ஒரு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்று அவர் தன்னைத் தானே அழைத்துக் கொண்டார். ஆனால் இப்போது,  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் அதிக அளவில் இருக்கும் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங் களில் அவர் ஒரு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுத் தலைவராக கருதப்படவில்லை. விவசாயிகளின் போராட்டத்துக்குப் பிறகு, விவசாய சமூகத்தின் பிரதிநிதியாக செயல்படுவதை விட பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இந்துத்து வாவுக்கும், அதாவது பிற்போக்கு மனம் கொண்ட மேல் ஜாதி இந்துக்களின் பிரதிநிதியாக செயல்படுபவராகவே அவர் பார்க்கப் படுகிறார்.

பொருளாதார நிலையில் கீழ்தங்கிய உயர்ஜாதி யினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் அரசமைப்பு சட்ட 103 ஆவது திருத்தமும் தன் பங்குக்கு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் ஆதரவாளர் என்ற பிரதமரின் தோற்றத்தை சிதைத்து விட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்ப்பந்தத்தால், அரசமைப்பு சட்டப்  பிரிவுகளுக்கு மாறாக  இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கு எதிராக பல மான போராட்டங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு இளைஞர்கள் சமூக ஊடகங்களில் மேற்கொண்டனர்.

அகில இந்திய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு இருந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வழியும் பா... வுக்கு எதிரான வெறுப்பை உருவாக்கி வளர்த்தது. இந்த வகையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெறுவதற்கு பாடுபட்ட பிராந்திய கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக உத்தரப்பிர தேசம் மற்றும் பீகார் மாநில இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு  மக்களால் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இந்தி பேசும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலினுக்கு பாராட் டுச் செய்திகள் சமூக ஊடகங்களில் வெள்ளம் போலப் பொங்கி பெருகின.

பா..கட்சிக்கு எதிராக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு தெரிவித்த எதிர்ப்பு பற்றிய இன்னொரு கதையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கான இட ஒதுக்கீட்டினை ரோஹினி ஆணையத்தின் பரிந்துரைப்படி பகுதி பகுதியாகப் பிரிப்பது என்ற ஆலோசனைக்கு எதிராக பா...வில் உள்ள சில இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுதலைவர்கள்  கடுமை யான கருத்துகளைத் தெரிவித்தனர்.

மற்ற இதர ஒவ்வொரு சமூகத்தைப் போலவே, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களும் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் கடுந் துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.  சாமியார் யோகி   அரசு மேற்கொண்ட முரண்பட்ட தொரு முடிவின் காரணமாக, விவசாயத் தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும் பால் தராத அல்லது கூடுதல் கால்நடை காரணமாக விவசாயப் பண்ணைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேசம் போன்றதொரு மாநிலத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபடும் மக்கள் தொகையில்  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் மிகப் பெரிய அளவில் பங்கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி, "பிரதான் மந்திரி கிசான்" நல நிதி பற்றி  கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு இந்தியாவில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள்  41.5 சதவிகித அளவில் ஈடுபட்டுள்ளனர் என்று ஒன்றிய விவசாய அமைச்சகம் பதில் அளித் துள்ளது.  .பி. மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் தொகை 52 சதவிகித அளவுக்கும் குறையாமல் இருப்பதாகும். பஞ்சாய், அரியானா மாநிலங்களைத் தவிர, மேற்கு உத்தரப் பிரதேசமும்,  விவசாயிகளின் போராட்டத்தினால் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். ஆனால் அதனால் விளைந்த துன்பங்கள் உத்தரப் பிரதேசத்தின் அனைத்து விவசாய சமூகங்களையும் பாதித்துள்ளன. போராட் டத்தின்போது, எத்தகைய அடக்கு முறைக்கு தாங்கள் உள்ளாக்கப்பட்டோம் என்பதற்காக இதர பிற்படுத் தப்பட்ட பிரிவு விவசாயிகள் மிகுந்த கோபம் அடைந்தவர்களாக இருக்கின்றனர்.

மிகமிக முக்கியமான மூன்றாவது காரணம், ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முன்பு மேற்கொள்ளப்பட்ட முடிவை பா...வும், ஒன்றிய அரசும் ஒட்டு மொத்தமாக இப்போது மறுத்துள்ளதாகும். இதற்கு எதிராக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களிடையே பெரும் எதிர்ப்பும் வெறுப்பும் தோன்றியுள்ளதை அடுத்து எண்ணற்ற பேரணிகள், கருத்தரங்குகள், பத்திரிகை யாளர் சந்திப்புகள்  வாரணாசி, காஜிபூர், ஜாவுன்பூர், ஆசாம்கர் மற்றும் லக்னோ உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டன.

நான்காவது காரணம்,  டாக்டர் பி.ஆர். அம்பேத் கரின் கோட்பாட்டின் செல்வாக்கினால் கவரப்பட்ட,   .பி. உள்ளிட்ட இந்தி பேசும் அனைத்துப் பகுதிகளி லும் உள்ள  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு இளைஞர் களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து கொண்டே வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்வரை,  நாராயண குரு, அய்யன்காலி, பெரியார், ஜோதிபாபூலே, சாகுஜி மகராஜ், சாவித்திரி பூலே, பாதிமா ஷெயிக் போன்றவர்களின் பெயர்கள் ஒரு சில அறிஞர்களுக்கு மட்டுமே தெரிந்தவையாக இருந்து வந்துள்ளன. ஆனால் இன்றோ தாழ்த்தப்பட்ட மற்றும்  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு சமூகங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்களின் முயற்சியினால் இந்தி பேசும் பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களின் மூலை முடுக்குகளிலும் அவர்களது பெயர்களும், பணிகளும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களும் இந்த மாற்றத்தினை ஏற்படுத்துபவையாக உள்ளன.

2014 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய கால கட்டத்தில்,  சமூக நீதிக் கோட்பாடு இத்தகைய சமூகங்களின் இளைஞர்களால் விளம்பரப்படுத்தப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டதே அன்றி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியவர்களால் சமூக நீதி பற்றி அதிக அளவில் பேசப்படவில்லை. பல்வேறுபட்ட காரணங்களினால்,  சமூக நீதி என்னும் தங்களது அடிப்படை அரசியல் பற்றி இந்த இரண்டு தலை வர்களும் அதிக அளவில் பேசாமல் இருப்பதற்கு,  ஒன்றிய புலனாய்வுத் துறைகள் தங்கள் மீதுள்ள வழக்குகளைத் திரும்பவும் கொண்டு வரப்படலாம் என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால், லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு இளைஞர்கள் எது பற்றியும் அச்சம் கொண்டிராதவர்களாக உள் ளனர். அவர்களது பிரச்சாரத்தின் பாதிப்பு அதி காரிகள், ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள்,  அல்லது தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு விவசாயிகள் மீது மட்டுமல்லாமல், அரசுப் பணி மற்றும் அதனுடன் கிடைக்கும் சமூக கவுரத்தை எதிர் நோக்கியும்,  தங்களது பொருளாதார அரசியல் வெற்றிக்காக,  2014 க்குப் பிறகு பா..கட்சியிடம் சதா சலாம் போட்டுக் கொண்டிருப்பவர்கள் மீதும் அது பாதிப்பை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் பா... மற்றும் ஆர்.எஸ்.எஸ். இணையர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஜாதி மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவது என்ற சமூக அரசியலை மேலே குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகள் எல்லாம் பெரும் அளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆளும் கட்சியான பா...வினால் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அத்தனை எளிதானது அல்ல என்பதை மட்டும் தைரியமாகவும், உறுதியாகவும் கூறலாம்.

நன்றி: 'தி இந்து' 19.01.2022

தமிழில்: .. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment