தமிழ்நாட்டில் புதிதாக 22,238 பேருக்கு கரோனா தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 31, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 22,238 பேருக்கு கரோனா தொற்று

சென்னை, ஜன.31- தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தாவது,, தமிழ்நாட்டில் நேற்று (30.1.2022) புதிதாக 1 லட்சத்து 36 ஆயிரத்து 952 பேருக்கு கரோனா பரிசோதனை செய் யப்பட்டது.

இதில் 22 ஆயிரத்து 238 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய் யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 3,998 பேரும், கோவையில் 2,865 பேரும், செங்கல்பட்டில் 1,534 பேரும், திருப்பூரில் 1,497 பேரும், சேலத்தில் 1,181 பேரும், ஈரோட்டில் 1,127 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 16 லட்சத்து 24 ஆயிரத்து 216 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 33 லட்சத்து 25 ஆயிரத்து 940 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 2 லட்சத்து 3 ஆயிரத்து 926 பேர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment