சென்னை, ஜன.31 தமிழ்நாட்டில் எண்ணிக்கையில் அதிகரித்துவரும் முதியோரை பாதுகாப்பதற்கான புதிய திட்டங்கள் பற்றிய வரைவு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான தமிழ்நாடு மாநில வரைவு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாடு இயக்குநர் டி.ரத்னா, ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.பி.நிர்மலா உள்பட 10 பேரைக் கொண்ட குழு அளித்துள்ள இந்த வரைவு கொள் கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை, இந்தியா வில் மூத்த குடிமக்கள்-2021 என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, 2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 75.10 லட்சம் என் றிருந்த மூத்த குடிமக்களின் எண் ணிக்கை, 2021ஆம் ஆண்டில் 1.04 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2031ஆம் ஆண்டில் 1.42 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. தற்போது 13.6 சதவீதம் என்ற கணக்கில் உள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2031ஆம் ஆண்டில் 18.2 சதவீதம் என்று உயர்ந்து, இந்தியாவில் 2ஆம் இடம்பிடிக்கலாம் என்று கருதப்படுகிறது.
50 சதவீதம் பேர் படித்தவர்கள்
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50.3 சதவீதம் பேர் படித்தவர்கள். 41.2 சதவீதம் பேர் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள். 39.2 சதவீதம் பேர் இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். பணி சார்ந்த ஓய்வூதியத் திட்டத்தில் 11 சதவீதம் பேர் உள்ளனர். பி.எப். திட்டத்தின் கீழ் 6.4 சதவீதம் பேர் வருகின்றனர். 8 சதவீதம் பேர் ஓய் வூதியம் பெறுகின்றனர். 15.2 சதவீ தம் பேர் தனியாக வசிக்கின்றனர்.
எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் அதே நேரத்தில், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச் சினைகளும் அதிகமாகின்றன.
உடல்நலன், சத்துணவு, மன நலன், சமூக பாதுகாப்பு, நிதி ஆதாரம், குடியிருப்பு, தகவல் போன்றவை கிடைக்காததோடு, கைவிடப்படுதல், உரிமை மறுப்பு என பல பிரச்சினைகளை முதியோர் எதிர்கொள்கின்றனர். எனவே இவற்றில் இருந்து அவர்களைக் காப்பதற்காக இந்த ஆண்டில் ஒரு கொள்கை வகுக்கப்பட வேண்டியது அவசர அவசியமாகிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள முதியோரின் வாழ்நாட்களை சமுதாய நட்புணர்வுடன் தனியார், பொதுத்துறை பங்களிப்புடன் மேம்படுத்துவதற்கான நோக்கத் துடன் இந்த கொள்கை வகுக்கப்பட் டுள்ளது. எந்தவொரு முதியவருக் கும் மதம், பாலினம், ஜாதி, இனம், பகுதி, மாற்றுத் திறன் அடிப்படை யில் பாகுபாடு காட்டப்படக்கூடாது.
என்னென்ன உதவி திட்டங்கள்?
அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு கீழ்காணும் திட்டங்களுக்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். அதன்படி, ஆம் புலன்ஸ், உணவு, பேரிடர், மருத்துவ அவசரங்களுக்கான இலவச எண் களை கொண்ட, முதியோருக்கு என்று வடிவமைக்கப்பட்ட தொலை பேசிகள், வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள முதியோருக்கு அளிக்கப் பட வேண்டும். முதியோருக்கான திட்டங்கள், உரிமைகள் பற்றி அவர் களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும். அவர்களுக்கான தனி இ-சேவை மய்யம், தனி தகவல் மய்யம் அமைக்கப்பட வேண்டும்.
முதுமையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதற்கான கல்வி, பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அளிக்கப்பட வேண்டும்.
தனி இயக்ககம்
முதியோரின் உரிமைகளை பாது காப்பதற்கான சட்ட உதவிகள் நிர் ணயிக்கப்பட வேண்டும். பேரிடர் உதவிகளில் அவர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்பட வேண்டும்.
பேரிடருக்கு பின்பு அவர்களுக்கு உணவு, உறைவிடம், சுகாதார சேவைகள் அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். மூத்த குடிமக்கள் நலன் இயக் ககம் என்ற அமைப்பை தொடக்க வேண்டும். இந்த கொள்கைகளை அமல்படுத்துவதை கண்காணிப்ப தற்கான மாநில குழு அமைக்கப்பட வேண்டும். இவற்றை செயல்படுத்து வதில் தேவையற்ற காலதாமதம் இருக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment