பேராவூரணி, ஜன. 31- அரசுப் பள்ளிக்கு மேனாள் மாணவர் ரூ 16 ஆயிரம் மதிப்பிலான சுத்திகரிப்பு கருவியை அன்பளிப்பாக வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளிக்கு, சென்னையில் மென் பொறியாளராகப் பணி யாற்றும், பள்ளியின் மேனாள் மாணவரான, எஸ்.ஆனந்தன், ரூபாய் 16 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு கருவியினை, பள்ளி தலைமை ஆசிரியர் சு.விஜயலட்சுமியிடம் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்கென வழங்கினார். அவருக்கு தலைமையாசிரியர் புத்த கங்களை பரிசாக வழங்கி, பயனாடை அணிவித்து கவுரவித்தார்.
அப்போது பள்ளி உத வியாசிரியர் ரஞ்சித் குமார், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சித்ராதேவி, ராமசாமி, அங்கன்வாடி பணியாளர்கள் கலா, கலைச்செல்வி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment