பாஜ.க. பொறுப்பாளர் சவுதாமணிமீது காவல்துறையினர் வழக்குப்பதிவு
சென்னை,ஜன.31- மதக்கல வரம் தூண்டும் விதமாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது மத்திய குற்றப்பிரிவு - சைபர் குற் றப்பிரிவு காவல்துறையி னர் வழக்குப்பதிவு செய்து உள்ளது.
மதத்தின் அடிப்படை யில் பகைமையை வளர்க் கும் வகையிலோ அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளை யும், உண்மை செய்திகளை திரித்தும் சமூக வலை தளங்களான பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் வெளி யிடுவோர் மீது கடுமை யான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த 28.1.2022 அன்று எச்சரிக்கை விடுத்திருந் தார்.
இந்நிலையில், இரு மதத்தினரிடையே கலவ ரம் ஏற்படுத்தும் வகையி லும், (இந்துக் கோவில்கள் இடிக்கப்படுவதாகவும், ஆனால் இடையூறு ஏற் படுத்தும் வகையில் இருக் கும் சர்ச் இடிக்கப்பட வில்லை எனவும்) மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி களை அநாகரிகமாக பேசி "சமூக வலைத்தளத் தில் அடையாளம் தெரி யாத நபர் ஒருவர் காட் சிப்பதிவு வெளியிட்டிருந் தார். இந்த காட்சிப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு "தைரியமா? விடியலுக்கா?" எனும் கருத்து பதிவிட்டு இருந்தார் பாஜக செயற் குழு உறுப்பினர் சவுதா மணி.
மதக்கலவரம் ஏற்படுத் தும் நோக்கில் வதந்தி பரப்பும் சவுதாமணி மீது நடவடிக்கை எடுக்க மத் திய குற்றப்பிரிவு - சைபர் குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை மேற் கொண்ட தில் காவல்துறையினர் மதக்கலவரம் உருவாக்கும் நோக்கில் பாஜக செயற் குழு உறுப்பினர் சவுதா மணி கருத்து பதிவிட்டது உறுதியானது. இதனை யடுத்து சவுதா மணி மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமை திக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள் ளனர்.
இதேபோல் கடந்த 28ஆம் தேதி பாஜக நிர் வாகியான வினோஜ் பி.செல்வம் என்பவர் மதக் கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் சமூகவலை தளத்தில் கருத்து பதிவிட்ட அவர்மீது 3 பிரிவு களின் கீழ் மத்திய குற்றப் பிரிவு - சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment