சென்னை,ஜன.10 துடிப்பான இள நபர்கள் அடங்கிய குழுவால் நிறுவப் பட்டிருக்கும் வோல்ட்ரிக்ஸ் மொபி லிட்டி, டிரெஸார் என்ற பெயருடன் நகர்ப்புற போக்குவரத்துக்கென தனியாக இ--சைக்கிள் வடிவமைக்கப் பட்டுள்ள தனது முதல் தயாரிப்பை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் மின் ஆற்றலில் இயங்கும் போக்குவரத்து துறையில் அதன் செயல்பாடுகளை தொடங்கியிருக்கிறது.
உலகளாவிய பருவநிலை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிராக தனது பங்களிப்பை வழங்குவதே இந்நிறுவனத் தின் நோக்கமாகும்.
அழகிய தோற்றம் மற்றும் இயக்க பண்பியல்புகளின் நேர்த்தியான கலவை யாக உருவாக்கப்பட்டிருக்கும் டிரெ ஸார், பெடல் உதவியுடன் இயக்கக்கூடிய எலெக்ட்ரிக் சைக்கிள்களுள் மிகச் சிறந்ததாகும். ஸ்மார்ட்டான, திறன் மிக்க மற்றும் மகிழ்ச்சியான சவாரியை ஏதுவாக்க 250 வாட் மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. சார்ஜிங் செய் யும் நிலையங்களுக்கான தேவையை அவசியமற்றதாக ஆக்குவதற்கு திறன்வசதி கொண்ட ஒருங்கிணைக்கப் பட்ட லித்தியம் அயன் பேட்டரி டிரெ ஸார்-அய் உண்மையிலேயே பிற தயாரிப்புகளிலிருந்து இதனை வேறு படுத்தி காட்டுகிறது. ஒரு மணிநேரத் திற்கு 25 கி.மீ. என்ற உயர் வேகத்தை எட்டும் இந்த இ-பைசைக்கிளை ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 60 80 கிமீ தூரம் வரை இயக்க முடியும். அய்ந்து நிலைகள் கொண்ட பெடல் உதவி, த்ராட்டில் மட்டும் (வழக்கமான ஒரு பைக் போல) மற்றும் கால்களைக் கொண்டு மிதித்து இயக்கும் அம்சத் தோடு இந்த பைசைக் கிள் உருவாக்கப் பட்டுள்ளது என இந்நிறுவன தலைமைச் செயல் அலுவலர் விவேக் எம்.பழனிவாசன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment