சென்னை,ஜன.31- மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைகளில் நாளை முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருந்தது. மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற் கரைகளில் பொதுமக்கள் கூட அரசு தடை விதித்திருந்தது.
தற்போது தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கட்டுப் பாடுகளை கடந்த 28-ஆம் தேதி முதல் அரசு விலக்கிக் கொண் டது. குறிப்பாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் அமல்படுத் தப்பட்ட முழு ஊரடங்கு ஆகி யவை விலக்கிக்கொள்ளப்பட் டது. பள்ளி, கல்லூரிகளை திறக் கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. வார இறுதி நாட்களில் வழி பாட்டு தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாளை (1.2.2022) முதல் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற் கரை ஆகியவற்றுக்கு பொது மக்கள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.
இது தொடர்பாக மாநக ராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டபோது, ‘‘மெரினா, பெசன்ட் நகர் கடற் கரை பகுதிகளில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக மாநகர காவல் ஆணையருடன் ஆலோசனை நடத்தினேன். இதில், பொதுமக்களை அனும திக்கலாம். அதே நேரத்தில் கரோனா பரவல் தடுப்பு வழி முறைகளான தனி மனித இடை வெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன் றவற்றை முறையாக கடைப் பிடிக்க வேண்டும். விதிகளை மீறினால் அபராதம் விதிக்க வேண்டும் என்று முடிவு செய் திருக்கிறோம்’’ என்றார்.
No comments:
Post a Comment