பார்ப்பனியம் ஒழியாதவரை எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

பார்ப்பனியம் ஒழியாதவரை எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை!

தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் - கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் ராதிகா சுதாகர் உரை

சென்னை, ஜன.8 பார்ப்பனியம் ஒழியாதவரை எந்த முன் னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்று மூத்த பத்திரி கையாளர் ராதிகா சுதாகர் அவர்கள் உரையாற்றினார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள்

கடந்த 23.12.2021 அன்று சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் ராதிகா சுதாகர் அவர்கள் உரையாற்றினார்.

அவரது  உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

சனாதனம் எப்பொழுது ஆட்சிக்கு அல்லது ஆட் சிக்கு மிக அருகில் வந்தால்கூட, இயல்பைக் குலைத்து விடும் என்பது நமக்கு நன்றகாகவே தெரியும்.

ஆனால், இப்பொழுது ஒன்றியத்தில் பா... ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. நமக்கு இது சவாலான காலகட்டம்தான். இன்னொரு சவால் என்பது, இதில் ஒரு சிக்கலை ஊடகங்கள்கூட ஏற்படுத்துகின்றன.

அங்கே உள்ள கருத்து சுதந்திரத்தை வெளியே வைத்தேகூட நாம் இதை அளவிட்டுக் கொள்ளலாம். ஆட்சியைப்பற்றி தெரியாதவர், ஆட்சி செய்வது என்பது, அமெரிக்காவிலும்கூட நடந்தது.

ஆனால், நான்காண்டு காலத்தில் டிரம்ப் ஆட்சியை மாற்றிவிட்டார்கள். அதையும் சில அரசியல் முயற்சிக்குப் பின்புதான் மாற்றினார்கள்; ஆனாலும், மாற்றிவிட் டார்கள்.

ஆனால், மோடிக்கு மறுவாய்ப்பு இங்கே வழங்கப் பட்டுவிட்டது. இதுபோன்ற ஒரு விசித்திரமான நாட்டில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

பார்ப்பனரல்லாத நமக்குத்தான் இது இயல்பு நிலை இல்லை என்று தெரிகிறது. இவ்வளவுக்கும் பா... விற்குத் தமிழ்நாடு வாக்களிக்கவில்லை. ஆனால், வாக்கு கள் வாங்காத பா... ஒவ்வொரு இடத்திலும் ஆட்சிக்கு வருகிறது.

அமெரிக்காவில் டிரம்பை ஆதரித்த ஊடகங் களையும், அவற்றின் செயல்பாடுகளையும் அதன் காரணங்களையும், அங்குள்ள ஊடகங்களே பகுப்பாய்வு செய்து, தேர்தலுக்கு முன்பு மக்களின் முன் தெளிவாக் கினார்கள். அங்கே ஒரு கைண்ட் ஆஃப் டெமாக்ரசி இன் ஜர்னலிசம் இருக்கிறது.

எல்லா இடங்களிலும் ஒரு ரைபிங் ஊடகம் இருந் தாலும், டெமாக்ரசி அங்கே  எவ்வளவு தூரம் செயல்படு கிறது என்னும்போது, நல்ல கருத்துகள் பரவலாகப் போய்ச் சேரும். அதுதான் ஜனநாயகத்தின் செயல்பாடு.

முற்போக்குப் பேசும் பார்ப்பனர்களிடம் ஒரு கேள்வி

நம்முடைய நாட்டில், ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒரு தூண் ஊடகம். அப்படிப் பகுப்பாய்வு செய்யும் நிலை உள்ளதா? முற்போக்குப் பேசும் பார்ப்பனர்களிடம் ஒரு கேள்வியை நான் வைக்கின்றேன்.

தமிழ் நியூஸ் 18 நிறுவனம், ஊடகவியலாளர்களிடம் நடந்துகொண்ட விதம் எப்படி என்பதை வைத்தே நாம் விளங்கிக்கொள்ளலாம்.

பொய்ப் பிரச்சாரத்தின்மூலம்தான் சனாதன கட்சி வளரும். இன்று அத்தனை ஊடகங்களையும் தன் கைக்குள் கொள்ளவேண்டும் என்பது பா...வின் ஒரு திட்டமாக இருக்கின்றது; அதற்கான முயற்சியை செய்துகொண்டுதான் இருக்கிறது.

தெரியாமல் நடப்பது ஒன்று; ஆனால், தெரிந்தே சில விஷயங்கள் நடைபெறுகின்றன.

1980 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் ஊடகத்துறையில் பார்ப்பனரல்லாதார் வர முடிந்தது!

ஒரு ஊடக நண்பருடன் பேசிக்கொண்டிருக் கும்பொழுது அவர் சொன்னார், 80 ஆம் ஆண்டு களின் மத்தியில் சென்னையில் இருக்கின்ற ஊட கங்களை அலசவேண்டும் என்றால், அப்பொழுது பார்ப்பனரல்லாதார் பலர் இத்துறைக்குள் நுழைந் தனர். குறிப்பிட்ட காலத்தை நான் சொல்லக் காரணம் என்னவென்றால், அதற்கு முன்பு, பார்ப் பனியத்தின் பிடியில்தான் பெரும்பான்மையான ஊடகங்கள் இருந்தன என்பதால்தான்.

2000 ஆம் ஆண்டு வரைக்கும் பார்ப்பன ரல்லாதார் ஊடகத் துறைக்குள் நுழைவது, வளர்ச்சி பெறுவது என்பது தொடர்ந்தது.

ஆனால், இன்று அந்த நிலை மாறி, மீண்டும் ஊடகங்கள் என்பது பார்ப்பனர்களின் பிடியில் முழுமையாகச் சென்றுவிட்டன.

Journalism has become something like and elite profession - and it has taken the character of being of probe for the Brahmanical Structure. Which the essential anti Tamil Character.

ஊடகத் துறை என்பது மேல்தட்டு மக்களுக்கானது போலவும்; தமிழர்களுக்கு எதிரான மனநிலையை இறுக்கச் செய்வதற்கான செயல்களில் பார்ப்பனர் களுடைய ஆதிக்கம் இருக்கிறது.

சமூகநீதிப் பார்வை இல்லாமல் இருக்கிறது.

நான் பார்த்த வரையில், வேறு மாநிலங்களில்கூட இது பிரச்சினையாகத்தான் இருக்கிறது.

அண்மையில் நடந்த ஒரு நிகழ்வை எடுத்துக் கொள்வோம். எங்கே பார்ப்பனியம் ஜாதியத்தைத் தூக்கி நிறுத்துகின்றது என்று கேட்பவர்களுக்காக சொல்கிறேன்.

பொய் சொல்லும் ஒரு யூடியூபர் கைதும் - தேசிய கட்சி தமிழ்நாட்டுத் தலைவரின் கண்டிப்பும்!

பொய் சொல்லும் ஒரு யூடியூபர் - வலை யொளியாளர்  கைது செய்யப்பட்ட பின், அதனை தேசிய கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் கண்டித்தார். பேச்சு சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்று விமர்சித்தார்.

அதுதான் விந்தையான ஒரு நகைச்சுவை.

ஆனால், நான் பார்த்தது அதைவிட விந்தை யான ஒன்று.

இங்கே இருக்கும் எந்த ஒரு ஆங்கில தேசிய அச்சு ஊடகங்களும் அதைக் கண்டிக்கவில்லை. ஒரு ஆசிரியர் குறிப்பைக்கூட எழுதவில்லை.

எது எதற்கோ ஆசிரியர் குறிப்பை எழுது கிறார்கள். ஏனென்று கேட்டால், அது ஒரு லோக்கல் மேட்டராம். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் சொல்வது லோக்கல் மேட்டர்.

அவர் சொன்ன கருத்திற்கும், பா...விற்கும் சம்பந்தம் இல்லையா?

ஒன்றிய அரசாங்கத்திற்கும் - அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?

இப்படி கொள்ளவேண்டும் என்று ஒரு பார்வையை வைப்பதுதான் தவறு.

கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வழியா இது என்ற கேள்வி எழுகிறது.

பா... நமக்கு மாற்று கருத்தாளர்கள் என்பதால், இந்த ஊடகங்களின்மீதான விமர்சனங்கள் எழவில்லை. எதைப் பேச்சு சுதந்திரம் என்று கொள்ள முடியும் என்பதை சட்டமும் தீர்மானித்துள்ளது; தார்மீகமாகவும் சமுதாயத்தில் சரி என்று எதைக் கொள்ள முடியும் என்பது வெளிப்படையானது.

நாம் மேடை போட்டுத்தான் பேசவேண்டி இருக்கிறது

பொய்ப் பரப்புவதை ஆதரிக்க முடியாது; அது கருத்துச் சுதந்திரம் கிடையாது. இது முற்போக்கல்ல என்று சொல்வதற்கு  ஆங்கில ஊடகங்கள் அல்ல. நாம் மேடை போட்டுத்தான் பேசவேண்டி இருக்கிறது. அதாவது, தோள்மீது கைபோட்டு வருகின்றார்கள்.

இப்பொழுது யார் ஜாதிப் பார்க்கிறார்கள்? என்கின்ற பேச்சுக்கு இன்னமும் இடமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். உண்மையில் பேச்சு சுதந்திரமும், பார்ப்பனர்களுடனான கலந்துரையாடலும் இந்த நிலையில்தான் இருக்கின்றன.

ஆனால், அவர்கள்தான் சொல்கிறார்கள், ‘‘கிராமத்தில் உள்ளவர்கள்தான் ஜாதி பார்க்கிறார்கள்'' என்று.

உண்மைதான், நாமும்கூட அதை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதற்கான எதிர்ப் போரை யார் செய்கிறார்கள்? நாம்தானே செய்கின்றோம். பார்ப்பனர்களா செய்கிறார்கள்?

இன்னொன்றையும் அடிக்கடி அவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதாவது திராவிடக் கட்சிகள் ஜாதிப் பார்த்துதான் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கிறார்கள் என்று.

இந்தக் கேள்வியை எப்பொழுதும் எழுப்பிக் கொண் டிருப்பார்கள். ஆனால், இப்படியெல்லாம் கேள்வி எழுப்புகின்றவர்களுக்கு, ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் ஒருவர் பொய் பேசுவதை - கருத்துச் சுதந்திரம் என்று சொல்வதைப்பற்றிக் கண்டிக்க மட்டும் அவர் களுக்குத் தோன்றுவதேயில்லை.

இதைத்தான் நாம் அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியாக இருக்கிறது.

அவர்கள் நம்மை விசாரிக்கலாம்; ஆனால், அவர்களை நாம் விசாரிக்கக்கூடாதா?

அதுமட்டுமல்ல, பார்ப்பனர்கள் நம்முடைய விமர்சனங்களுக்கு என்றைக்கும் எதிர் விமர்சனங்களை வைப்பது கிடையாது. அதேபோல, அவர்களை விசார ணைக்கு உட்படுத்துவதற்காக அவர்களுடைய கதவு களைக்கூட நமக்காகத் திறந்துவிடுவதில்லை. அவர்கள் நம்மை விசாரிக்கலாம்; ஆனால், அவர்களை நாம் விசாரிக்கக்கூடாது என்ற நிலை இன்னமும் இருக்கிறது.

பார்ப்பனர்களின் மனதில் ஜாதி உயிரோடு இருக்கின்ற காரணத்தினால்தான் - இன்னும் ஜாதியம் உயிரோடு இருக்கின்றது.

எனவே, அதை அவர்கள் கவனிக்கவேண்டும். ஊடகத்தில் ஜாதிய நோக்கத்தோடு செய்யப்படும் திருப் பங்கள் புதிதல்ல என்றாலும், இங்கே நாம் வலையொ ளியிலேயோ, சமூக ஊடகங்களில்தான் அதைப்பற்றிப் பேசுவதோ, எழுதுவதோ இயல்கின்றது.

மாதம் ரூ.66 ஆயிரம் ஊதியம் பெறும் உயர் ஜாதியினர்களுக்கு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடாம்

ஆனால், அவர்கள் அரசியல் ரீதியாகவே அவர் களின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டே போகிறார்கள். கல்வியில், வேலை வாய்ப்பில், இந்தித் திணிப்பு ஒழிந்தபாடில்லை; மாதம் ரூ.66 ஆயிரம் ஊதியம் பெறும் உயர் ஜாதியினர்களுக்கு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குகிறார்கள். இதையெல்லாம் அவர்கள் அனாயசமாக செய்துவிட்டுப் போகிறார்கள்.

இவை எதற்கும் தேசிய ஊடகங்கள் எதிர்ப்பான நிலைப்பாட்டினை எடுப்பதில்லை. தேசிய ஊடகங்கள் என்றால், ஆங்கில ஊடகங்களைத்தான் நான் சொல்கிறேன்.

பா...வை எதிர்த்து ஒரு மென்மையான கட்டு ரையைப் போட்டால், ஓராண்டு முழுவதும் பார்ப் பனரல்லாதார் அரசியலை எதிர்த்த நிலைப்பாடுதான் எடுக்கின்றார்கள்.

ஓர் உதாரணம் சொல்லுகிறேன்:

20.12.2021 அன்று ஒரு தேசிய ஊடகத்தில் ஒருவரைப் பேட்டி கண்டிருந்தார்கள். யாரைப் பேட்டி கண்டார்கள் என்றால், பொய்ப் பேசுவதைக் கருத்துச் சுதந்திரம் என்று சொன்னவரைப் பேட்டிக் கண்டிருக்கிறார்கள்.

அவரிடம் என்ன கேள்வி கேட்டார்கள் என்றால்,

நீங்கள் ...தி.மு..வினரை சேர்த்து வைக்கப் போகிறர்களா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்.

இதைத் தவிர, அவர்களுக்குக் கிடைத்தது சீமான் - தமிழ்நாட்டைப்பற்றி தெரிந்தவர்களுக்கு இப்படி யெல்லாம் அபத்தம் செய்ய வாய்ப்பில்லை.

அவர்கள் எழுதுவதையும், அவர்கள் எழுதாமல் விடுவதையும்தான் பேசவேண்டி உள்ளது. அன்று போல்தான் இன்றும்.

பெரியாரே சொல்லியிருக்கிறார்!

விடுதலையில் என்ன எழுதுவது என்று அவரிடம் கேட்டபொழுது,

பெரியாரே சொன்னார், ஆங்கிலப் பத்திரிகையானஇந்துவைப் படியுங்கள் - அவர்கள் விரும்பி விட்ட செய்தியை நீங்கள் சரியாக எழுதலாம் என்று.

அந்த நிலைதான் இன்றும்.

படித்தால் நமக்கு உடனடியாக 24 மணிநேரம் போதாதுஅதற்கு எதிர்வினையாற்றுவதற்கு. அது போன்ற எழுத்துகள்தான் அங்கு உள்ளன.

ஆங்கிலம் என்பது

இந்து தேசியவாதிகளின் மொழியா?

இன்னொரு கேள்வியும் எழுகிறது -

ஆங்கிலம் என்பது இந்து தேசியவாதிகளின் மொழியா? அப்படியானால், அறிஞர் அண்ணா வின், அண்ணல் அம்பேத்கரின், பெரியாரின் ஆங்கில எழுத்துகளை எங்கே வைப்பது?

பானர்ஜியைப் படிக்கலாம் - ஆனால், மீனா கந்தசாமியைப் படிக்கக்கூடாதா?

நீதிக்கட்சி காலத்திலேயே ஜஸ்டிஸ் என்ற பத் திரிகை வந்திருக்கிறது. பெரியார் அவர்கள், ரிவோல்ட் என்ற பத்திரிகையையும், தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகிய ஆங்கிலப் பத்திரிகைகளை நடத்தினார்.

அண்ணாவின் ஆங்கில எழுத்துகள், நாடாளு மன்ற உரைகள் எல்லாம் உள்ளன.

அம்பேத்கர் அவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரை களையே ஆங்கிலத்தில் எழுதினார்.

ஆனால், இவர்களையெல்லாம் நாம் எப் பொழுது படிக்கப் போகிறோம்?

ஆங்கிலம் என்றால் என்னவென்று கேட்க வேண் டிய நிலையில் இருக்கிறோம்.

பார்ப்பனியர்களிடம் கேட்கவேண்டி இருக் கிறது - அம்பேத்கரைப் படித்தால், நீங்கள் என்ன ஜாதி என்று நம்மைப்பற்றி ஒரு கணக்குப் போடு கிறார்கள்.

இதை எப்பொழுது பார்ப்பனியம் சரி செய்யப் போகிறது?

தாம்பிராஸ்என்ன சொல்கிறது?

தேசிய ஊடகங்களின் நிலைப்பாடுகள் நம் யாருக்கும் ஆச்சரியம் அளிக்கப் போவதில்லை. என்றாலும், இதைப் பேசுவதற்குக் காரணம், பார்ப்பனர்களை மாற்றவேண்டும் என்பதற்காக அல்ல - பார்ப்பனர்கள் மாறவேயில்லை என்பதை பார்ப்பனர்களுக்குச் சொல்வதற்காகத்தான்.

தவிர, அதை பார்ப்பனரல்லாதவர்களுக்கும் மீண்டும் நினைவுப்படுத்த.

ஏனென்றால், ஒரு சிலர் அடிபடும்வரை, பார்ப் பனர்கள் அவர்களுடைய வேலையைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், ‘பாவம் அவர்கள்என்று பேசுபவர்கள் பொது சமூகத்தில் இருக்கிறார்கள்.

தாம்பிராஸ் அவர்களுடைய வேலையையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?

பார்ப்பனியத்தின் கட்சி பா...

பா... என்கிற கட்சி அவர்களுடைய வேலையையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?

யாருடைய கட்சி பா...?

பா... என்பது நம்முடைய கட்சியா  - பார்ப்பனியத்தின் கட்சி பா...

என்ன வேலை பார்க்கின்றது பா... என்கின்ற கேள்வியை, நாம் பொது சமூகத்திற்கு அடிக்கடி எழுப்ப வேண்டி இருக்கிறது.

இன்னொரு விஷயத்திற்கு வருவோம் - ஜாதி, பார்ப்பனரிடத்தில் அப்படியே உள்ளது - இதைப்பற்றி யார் எழுதுவது?

ஜாதி மாறி திருமணம் செய்தால்கூட, அதில் உள்ள பெரும்பான்மையினர், முற்போக்காளர்களாக மாறு கிறார்களா? என்று பார்ப்பனர்களிடம் கேட்கிறேன்.

முற்போக்காளர்களாக மாறுகிறீர்களா? அல்லது மீண்டும் அதே ஜாதியத்தில் நின்று கொண்டிருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கவேண்டி இருக்கிறது.

அப்படி கேள்வி கேட்கவேண்டிய காரணம்கூட, கமலா ஹாரிசின் தாயார்பற்றி சில ஆண்டுக்கு முன்பு பேசவேண்டிய நேரம் வந்தது. அப்பொழுது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்கின்ற ஒரு கேள்வி எழுந்தது. அதைப்பற்றியெல்லாம் யார் எழுதுவது இங்கே - அதைப்பற்றி அலசவேண்டியதில்லை. இதெல்லாம் சோசியாலஜிக் ஸ்டெடிதான்.

பார்ப்பனியம் ஒழியாதவரை எந்த முன்னேற்றமும் நிகழப்போவதில்லை

அதைப்பற்றி ஏன் அக்கறைப்படுவதில்லை. ஆனால், பார்ப்பனியம் ஒழியாதவரை எந்த முன்னேற்றமும் நிகழப்போவதில்லை. அவர் களுக்கும் சரி - நமக்கும் சரி.

நம் பார்வையில், ஜாதியம் எய்ட்ஸ் போன்ற ஒரு மோசமான நோய்தான். சட்டம் மட்டும் அதற்குப் போதாது; பிரச்சாரம் மூலமாகத்தான் ஒழிக்கவேண்டிய நோய்தான் ஜாதி.

இதில் பார்ப்பனர்களின் பங்கு என்னவாக இருக்கப் போகிறது என்பதுதான்.

பார்ப்பனர்கள் முற்போக்குச் சிந்தனை கொண்ட பத்திரிகைகளை நடத்துபவர்கள் என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி -

உண்மையில் ஊடகத்தில் படிக்கவேண்டியது என்ன?

நீங்கள் முற்போக்கு என்று சொன்னால், நாங்கள் உங்களைப் படிக்கிறோம்; உங்களுடைய கதவைத் திறந்துவிடுங்கள்.

உண்மையில் ஊடகத்தில் படிக்கவேண்டியது - தாம்பிராஸ் நிறுவனத்தை, காஞ்சி சங்கர மடத்தைத்தான்.

அவர்கள் எப்படியெல்லாம் மாறிய காலத்தில், ஜாதியத்தை எப்படியெல்லாம் பிடித்து வைத்துள்ளார்கள் என்று படிக்கவேண்டிய தேவை உள்ளது.

இறுதியாக, ஊடகங்கள் கவனப்படுத்தவேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன.

அதில் ஒன்றுதான், சோசியோ எகனாமிக் கேஸ்ட் சென்டர்ஸ் - 2011 ஆம் ஆண்டு அதனை முழுமையாக வெளியிடவில்லை. அதைப்பற்றி பேசவில்லை.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பார்ப்பனர்களைப்பற்றி ஏன் கணக்கெடுப்பதில்லை?

இன்னொன்று மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஷெட்யூல்டு காஸ்ட்பற்றி தனியே கணக்கெடுக்கிறார்கள். ஆனால், பார்ப்பனர்களைப்பற்றிய கணக்கு எங்கே? என்று கேட்கவேண்டி  இருக்கிறது.

இதையெல்லாம் பேசவேண்டிய ஊடகங்களின் மவுனத்தைப்பற்றி யார் பேசுவது?

நன்றி, வணக்கம்!

இவ்வாறு மூத்த பத்திரிகையாளர் ராதிகா சுதாகர் அவர்கள் உரையாற்றினார்

No comments:

Post a Comment