புதுடில்லி, ஜன.8 27 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் 3ஆவது அலை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல்வேறு மாநிலங்களில் தொற்று விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உருமாறிய கரோனா வைரஸாக கருதப்படும் ஒமைக்ரான் பாதிப்பும் நாளுக்கும் நாள் உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளது. 1,203 பேர் ஒமைக்ரான் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை 27 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராட்டிராவில் 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் 513 பேரும், கருநாடகாவில் 333 பேரும், ராஜஸ்தானில் 291 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 284 பேர், தெலங்கானாவில் 123 பேர், தமிழ்நாட்டில் 121 பேர் ஒமைக்ரான் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment