ஒசூர், ஜன.8 அம்ரித்சரஸ் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் "இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தால் கடந்த நவம்பர் 27-29ஆம் தேதிகளில் கோவாவில் நடைபெற்ற "அகில இந்திய தேசிய வாகையர் பட்டப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் ஒசூர் அரசன் தமிழர் சிலம்பப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் பங்கு கொண்டு 9 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கம் வென்றனர்.
அதன் மூலம் நேபாளத்தில் காத்மண்டு நகரத்தில் எதிர்வரும் ஜனவரி 16-20 தேதிகளில் நடைபெறும் "இந்திய-நேபாளம் பன்னாட்டு வாகையர் பட்டப் போட்டி- 2021-2022-க்கு தேர்வாகி பயணிக்க உள்ளனர்.
இவர்கள் மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி வழிகாட்டுதலின்படி தனது பயிற்சியாளர் ஆசான் திருமலை சக்தியுடன் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாசை சந்தித்து தாங்கள் வென்று வந்த பதக்கங் களையும், சான்றிதழையும் காட்டி வாழ்த்துகள் பெற்றனர்.
இந்திய-நேபாளம் பன்னாட்டு வாகையர் பட்டப்போட்டி 2021-2022 க்கான போட்டிக்கு தேர்வு செய்யபட்டவர்களுக்கான பயண செலவை ஏற்பதாக ஒய்.பிரகாஷ் உறுதியளித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் சு.வன வேந்தன், மாநில வழக்குரைஞர் மாணவர் கழக அமைப்பாளர் க.கா.வெற்றி திராவிடர் மகளிர்பாசறை தலைவரும் நிழல் அறக்கட்டளை நிறுவனருமான கோ.கண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment