ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·    இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பு. முது நிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு தொடர அனுமதி. உயர்ஜாதி அரியவகை ஏழைகள் இட ஒதுக்கீடு இந்தாண்டு தொடரும். வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் மூன்றாவது வாரம் என உச்ச நீதிமன்றம் முடிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· தமிழ் நாடு அரசின் அனைத்து பொதுத்துறை மற்றும் ஆணையங்களின் நியமனங்கள் குறித்த தேர்வுகளை இனி தமிழ் நாடு தேர்வாணையம் நடத்திடும் என்ற தமிழ் நாடு அரசின் மசோதா சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்றது.

தி டெலிகிராப்:

· இதர பிற்படுத்தப்பட்ட கிரிமிலேயர் குறித்த பி.பி. சர்மா குழு அறிக்கையை ஒன்றிய அமைச்சரவை மீண்டும் சமூக நலத்துறைக்கே அனுப்பியது.

·  பஞ்சாப் பெரோஷ்பூரில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பா...வினர் என விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

· பிரதமர் மோடி கலந்து கொண்ட காணொலி வழி நிகழ்வில், தனது அரசின் நடவடிக்கைகளில் குறுக்கிடுவ தாக மேற்கு வங்க ஆளுநர் மீது முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

· ஹிட்லரிடம் பொய் பிரச்சாரத்திற்கென ஒரே ஒரு அமைச்சர் இருந்தார். ஆனால், மோடி அரசின் ஒட்டு மொத்த அமைச்சர்களும் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் கண்டனம்..

   - குடந்தை கருணா


No comments:

Post a Comment