புதுச்சேரி மின் துறை தனியார் மயமாக்கலைக் கண்டித்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

புதுச்சேரி மின் துறை தனியார் மயமாக்கலைக் கண்டித்து

 அனைத்து தொழிற்சங்க  கூட்டமைப்புகள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜன. 30- புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புகள் சார்பில் நேற்று (29.1.2022) கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில மின் துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இதற்கு ஆதரவளிக்கும் வகையில், புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித் தும், புதுச்சேரியில் அய்என்டியூசி தொழிற்சங்கம், விசிக தொழிற்சங்கம், ஏஅய்டியுசி, சிஅய்டியு, எல்பிஎப், டைபி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்டியுசி பொதுச் செயலாளர் கே.சேது செல்வம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு, புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மின் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்சார பராமரிப்பு பணிகளை தடையின்றி மேற்கொள்ளவேண்டும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

டில்லியில் கடும் குளிரால் 170 பேர் பலி

புதுடில்லி, ஜன. 30- டில்லியில் கடும் குளிர் காரணமாக கடந்த 28 நாட்களில் வீடற்றவர்கள் சுமார் 172 பேர் உயிரிழந்துள்ள தாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தொகுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டில்லியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வந்ததையடுத்து, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது

குளிர்காலத்தில் வீடற்றவர்களுக்கு முறையான ஏற்பாடு களைச் செய்ய வேண்டும் என்று டில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் தலைவருக்கும், டில்லி முதல மைச்சர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் விரிவான அறிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை தன்னார்வ தொண்டு நிறுவனம் எழுதி யுள்ளதாகக் கூறியுள்ளது

தன்னார்வ தொண்டு நிறுவனமான ஹோலிஸ்டிக் டெவலப்மென்ட் அதிகாரி ஒருவர் கூறுகையில், சராய் காலே கான், ஆசப் அலி சாலை, காஷ்மீர் கேட், ஆசாத்பூர், நிஜாமுதீன், ஓக்லா, சாந்தினி சவுக் மற்றும் டில்லி கேட் போன்ற இடங்களில் வீடற்ற மக்கள் அதிகளவில் திறந்த வெளியில் படுத்து உறங்குகின்றனர்

கடந்த ஜனவரி 24ஆம் தேதி மட்டும் சுமார் 106 பேர் கடுங்குளிரில் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும் பாலானோர் வீடற்றவர்கள் ஆவர்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாதவகையில் இந்த ஆண்டு கடும் குளிர் நிலவியுள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 10 டிகிரி சரிந்து 12.1 டிகிரி செல்சியஸாக இருந்தது குறிப் பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் கரோனா தொற்று

குறைந்தாலும் ஆபத்து நீடிக்கிறது

சென்னை, ஜன.30 இந்தியாவின் சில நகரங்கள், மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கினாலும், ஆபத்து நீடிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறியதாவது:

பெரும்பாலான நாடுகளில் தொற்றுப் பாதிப்பு இன்னும் அதிகமாகவே உள்ளது. எந்த நாட்டில் தற்போது குறைந்து வருகிறது என்பது இல்லாமல், அனைத்து நாடுகளும் இன் னமும் அபாய கட்டத்தை கடக்கவில்லை. எனவே, சில நகரங்கள், மாநிலங்களில் தொற்று குறையத் தொடங்கினா லும், ஆபத்து இன்னும் நீடிக்கிறது. கரோனா தொற்றினால் பாதித்துள்ள நாடுகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். பரவலைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்பட சூழ்நிலைக்கேற்ற பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும். இந்தியா தொற்று பரவலின் மத்தியில் இருப்பதால், வைரஸ் பரவலைக் குறைத்து உயிர்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். தொற்று முடிவுக்கு வந்தால், வைரஸ் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று கிடையாது. டெல்டாவுடன் ஒப்பிடும்போது, நுரையீரலை விட, சுவாசக் குழாயின் மேல்பகுதி திசுக்களை ஒமிக்ரான் வேகமாகப் பாதிக்கக்கூடியது.

இதுவே இந்த உருமாறிய வைரஸ் பரவலுக்கு உதவக் கூடும். ஒமிக்ரானுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் அதிகரித்து வருகிறது. எனவே ஆபத்தில் உள்ள நாடுகள், அனைத்து மக்களும் தடுப்பூசி போடுவதற்கான முயற்சி களை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment