ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 28, 2022

ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின்  பாரம் பரியத்தை பறைசாற்றும் வகையிலான அலங்கார ஊர்திகளை குடியரசு தினத்தன்று டில்லியில் அனு மதிக்க மறுத்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் நமது தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட பாரம் பரியத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் பாரதியார், ..சிதம்பரனார், வேலுநாச்சியார் ஆகியோரின் உருவப் படங்களை கையிலேந்தி, அவர்களின் முகக் கவசங்களுடன் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் இந்திய தொழிற்சங்க மய்யம் சிஅய்டியு உள்ளிட்ட பல் வேறு அமைப்புகள் சார்பில் ஊர்வலமும் உறுதி யேற்பு நிகழ்ச்சியும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

No comments:

Post a Comment