ஆத்தூர் அங்கம்மாளுக்கு நமது வீர வணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 28, 2022

ஆத்தூர் அங்கம்மாளுக்கு நமது வீர வணக்கம்

97 வயதுள்ள நிலை யிலும் எப்போதும் கொள்கை உணர்வும் சுறு சுறுப்பும் கொண்ட முது பெரும் பெரியார் பெருந் தொண்டர் ஆத்தூர் .வி. தங்கவேலு. அவர்களது வாழ்விணையரும் கழகக் கொள்கைகளை தீவிர மாகப் பின்பற்றியவரு மான தோழர் அங்கம்மாள் (வயது 86) அவர்கள் நேற்றிரவு (27.1.2022) வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமும் துயரமும் அடைகிறோம்.

ஆத்தூர் மாவட்டத் தலைவர் . வானவில் அவர்களது தாயாரும், பகுத்தறிவு ஆசிரியரணி மாநிலத்தலைவர் தமிழ் பிரபாகரன் அவர்களது பாட்டியுமான திருமதி அங்கம்மாள் அவர்கள் நம்மிடத்தில் மிகுந்த பாசமும், மதிப்பும்  கொண்ட பெரியார் பெருந்தகையாளர். எனது வாழ்விணையர் மோகனா அவர்களிடமும் எம் குடும்பத்திடமும் தனியாக வாஞ்சையோடு பழகியவர்.

அவர் ஒரு பொட்டு நகைகூட அணிந்து நான் பார்த்ததேயில்லை - கடும் உழைப்பாளியாக இருந்து அந்த குடும்பத்தைக் கட்டிக் காத்தவர்; கொள்கை யாளர்.

அவரது மறைவால் ஈடற்ற இழப்புக்கு ஆளாகி யுள்ள அவரது வாழ்விணையர் .வி. தங்கவேலு, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் கூறுகிறோம்.

இலட்சியவாதி ஆத்தூர் அங்கம்மாள் அவர் களுக்கு நமது வீர வணக்கம்.

கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை       

28-1-2022           

No comments:

Post a Comment