புதுடில்லி, ஜன. 7- நாட்டின் பயணியர் வாகன விற்பனை, கடந்த டிசம்பரில் 11 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண் டிருப்பதாக, வாகன முகவர்கள் சங்க மான எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.
தொற்றுக் காரணமாக கட்டுப் பாடுகள் அதிகரிப்பதால், வரும் மாதங்களிலும் விற்பனை பாதிக்கப் படலாம் என்றும் அறிவித்துள்ளது.இது குறித்து மேலும் தெரிவித்துள்ள தாவது:
வழக்கமாக, டிசம்பரில் வாகன விற்பனை அதிகமாக இருக்கும். ஆண்டு கடைசியில் இருப்பில் உள்ள கார்களை விற்பனை செய்வதற்காக, பல சலுகைகளும் இக்கால கட்டத்தில் அறிவிக்கப்படும்.
ஆனால், இம்முறை விற்பனை அதிகரிப்பதற்கு பதிலாக சரிவைக் கண்டு உள்ளது. விலை அதிகரிப்பு, வீட்டிலிருந்து பணி, கிராமப் பகுதி களில் பொருளாதார சிக்கல்கள், ஒமைக்ரான் குறித்த அச்சம் ஆகியவை விற்பனையை கடுமையாக பாதித்து உள்ளன.
மேலும் ‘செமிகண்டக்டர் சிப்’ தட்டுப்பாடு காரணமாக, உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டு, அதன் காரணமாகவும் விற்பனை சரிவை கண்டது.
வர்த்தக வாகன விற்பனையை பொறுத்தவரை, டிசம்பரில் 14 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருவதால், வரும் மாதங்களிலும் வாகன விற்பனை பாதிக்கப்படக்கூடும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment