கழக கலந்துரையாடலில் தீர்மானம்
மதுரை, ஜன. 7 மதுரை மாநகர் பீபீகுளம் நேதாஜி முக்கிய சாலையில் 2022 ஜனவரி 1 மாலை 6 மணிக்கு நிலா மகாலில் மாவட்ட துணை செயலாளர் இரா.லீ.சுரேஷ் வரவேற்புரை யோடு தொடங்கிய கூட்டத் திற்கு மாவட்டத் தலைவர் பழக்கடைஅ.முருகானந்தம் தலைமையேற்றார்.
மாநில அமைப்பு செயலாளர் வே.செல்வம் கூட்டத்தை ஒருங் கிணைத்தார்.
கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தன் உரை யில், நமது இயக்க கரோனா கால செயல்பாடுகள் விடுதலை இதழின் சிறப்புகள் தமிழர் தலைவரின் சூளுரை திராவிடர் இயக்க ஆட்சி தமிழ்நாடு முதல மைச்சர் தளபதி அவர்களின் சிறப்பான செயல்பாடு தமிழர் தலைவர் அவர்கள் எடுக்கும் முடிவுகள் தோழர்கள் அதை நடைமுறை படுத்தும் வழி முறைகள் ஆசிரியரின் பயணம் குறித்த செய்திகளை அடுக் கடுக்காக எடுத்து வைத்ததோடு விடுதலை புத்தாண்டு அறிக் கையை முழுமையாக எடுத்து சொல்லி உரையை நிறைவு செய்தார்.
மாவட்டத்தலைவர் முருகா னந்தம் கூட்ட தீர்மானங்களை முழுமையாக செயலாற்றுவோம் எனக் கூறினார். மாவட்ட அமைப்பாளர் இரா. திருப்பதி பகுதிச்செயலாளர், ஆட்டோ செல்வம் க.பிச்சைப் பாண்டி ராக்கு ஆகியோர் கருத்து ரைக்குப் பின் அமைப்பு செய லாளர் வே.செல்வம், மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம் உரைக்குப்பின் பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற தலைவர் முனைவர் வா. நேரு நிறைவுரையில் திராவிடப் பொழிலின் சிறப்புகள் அது வெளிவர தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழி காட்டல் ஆசிரியர் குழுவின் ஒருங்கிணைப்பு இயக்க நூல்கள் அமேசான் கிண்டில் தளம் மூலம் உலகமெங்கும் பரப்பும் பணி ஆகியவற்றை விளக்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கழக உறுப்பினர் அட்டையை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். கூட்டம் நடந்த பகுதியில் மாவட்ட அமைப்பாளர் இரா. திருப்பதி தோழர்கள் இராசேந் திரன் கணேசன், பிச்சைப் பாண்டி ஆகியோர் கொடிகள் கட்டி மண்டபத்தில் கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்து அனைவருக்கும் தேநீர் பிஸ்கட் வழங்கினர்.
கூட்டத்தில் செல்லத்துரை, இளங்கோவன், இராமச்சந் திரன், அல்லிராணி, இராமசாமி, தனுஷ்கோடி, மோதிலால், கேசவன், கிருட்டினமூர்த்தி, விடுதலை இராசா, வேல்துரை, பேக்கரி கண்ணன், அண்ணா நகர் செந்தில் குமார், மாவட்ட துணை தலைவர் பொ.பவுன் ராஜ், மு.கனி, மாரிமுத்து, சேகர், மணிராஜ் மற்றும் திரளான தோழர்கள் கலந்து கொண் டனர். நிலா மஹாலின் உரிமையா ளர் மரியாதைக்குரிய ஜெ.ஜகாங்கீர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்
தீர்மானங்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் புத்தாண்டு வாழ்த் துச் செய்தியில்குறிப்பிட்டுள்ள படி கழக ஏடுகளைபரப்புவதோடு விடுதலை சந்தாக்களை சேர்த்து ஒப்படைக்கவும் முடிவு செய் யப்பட்டது.
வைரஸ் தொற்று குறித்த அரசு முடிவின் படி கடைப் பிடிப்ப தோடு அதற்கு தகுந்தாற் போல் நம் கழக பிரச்சாரங்களை முன்னெடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment