அரசை விமர்சித்த அமைச்சர் பதவி நீக்கம் இலங்கை அதிபர் நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

அரசை விமர்சித்த அமைச்சர் பதவி நீக்கம் இலங்கை அதிபர் நடவடிக்கை

கொழும்பு, ஜன. 7- அரசை விமர்சித்த முக்கிய அமைச்சர் மற்றும் அதி காரிகளை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி நீக்கம் செய்துள்ளதுடன், அரசை விமர் சிப்பவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

கரோனா தொற்று பரவியது முதல் இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந் தித்து வருகிறது. நாட்டின் பண வீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர். இதனிடையே, விவசாய கொள் கையில் இலங்கை அதிபர் கோத்த பய ராஜபக்ச பெரிய மாற்றத்தை கொண்டுவந்தார். ஆனால் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் இலங் கையில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் அரசின் விவசாயக் கொள்கையை ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் விமர்சித்து உள்ளார்.

ஆளும் கட்சியின் மத்திய அமைச்சரான சுசில் பிரேமஜயந்தா, இலங்கை அரசை விமர்சித்து பேசி யதற்காக அதிபர் கோத்தபய ராஜ பக்ச அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். மேலும், அரசுக்கு எதிராக பொதுவெளியில் பேசும் அமைச்சர்கள், எம்.பிக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் சொந்த கட்சிக்கும், அரசுக் கும் எதிராக பேசுவது தர்மம் கிடையாது.

ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதனைஅமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கலாம் அல் லது ஆலோசிக்கலாம், அதை விட்டு மீடியா முன்னிலையில் அரசை விமர்சிக்கக் கூடாது என அவர் தெரிவித்தார். உணவுப் பஞ்சம் விரைவில் ஏற்படலாம் என பேசியதற்காக சமீபத்தில் விவசாயச் செயலரையும் பணியிலிருந்து நீக்கி யிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment