இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் விமான சேவைக்கு தடை- ஹாங்காங் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் விமான சேவைக்கு தடை- ஹாங்காங் அறிவிப்பு

ஹாங்காங், ஜன. 7- இந்தியாவில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. 5.1.2022 அன்று நிலவரப்படி 58,097 பேருக்கு கரோனா தொற்று உறு தியாகியுள்ளது. அதேபோல 2,135 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா உள் ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்துதான் ஒமைக் ரான் தொற்று அதிகம் பரவுவதாக குறிப்பிட்டுள்ள ஹாங்காங் அரசு, நோய்த்தொற்று பரவுவதை தடுக் கும் வகையில் இந்தியா, ஆஸ்திரே லியா, கனடா, பிரான்ஸ், அமெ ரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 8 நாடுகளில் இருந்து வரும் விமானங் களுக்கு தடை விதிக்கப்படும்.

இந்த உத்தரவு வரும் சனிக் கிழமை (8.1.2022) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும், 2 வாரங் களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment