அம்பத்தூர் தொழிற்பேட்டையை ஒழித்துக் கட்ட தொழில் துறை அதிகாரிகள் தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

அம்பத்தூர் தொழிற்பேட்டையை ஒழித்துக் கட்ட தொழில் துறை அதிகாரிகள் தீவிரம்

சென்னை திருமங்கலத்தில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு உள்ளே நுழையும் இந்த இடத்தில், இரண்டு தொழிற்சாலைகள் இருந்தன. நலிவு அடைந்தன. மாற்றாக, புதிய தொழிற்சாலைக்குத் தான் உரிமம் தர முடியும். அதுதான் சட்டம். ஆனால், அதைக் குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டனர் தொழில்துறை அதிகாரிகள்

கணபதி பவன் மற்றும் Chewbrew என்ற கேக் கடைகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வரு கின்றன.

ஏற்கெனவே, ஒரு பெரிய திருமண மண்டபம், தனியார் பள்ளி, ஒரு பெரிய உணவகம் கட்டி விட்டார்கள்.  அதை எதிர்த்து, தொழிற்பேட்டை நலச் சங்கத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், அவற்றை இடிக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்து விட்டது.

அதையும் மதிக்கவில்லை. மேலும் புதிய உணவகம் வருகின்றது என்றால், என்ன பொருள்?

ஏராளமான கோவில்கள் புதிதாகத் தோன்றி உள்ளன. எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, வாவின் சிக்னல் அருகில், நடைவழியை மறித்து, வினைல் ஷீட்டுகளை வைத்து ஒரு குரங்கு கோவிலைக் கட்டி இருக்கின்றனர். அங்கே திருவிழா நடைபெறுகின்றது. விரைவில் அந்த இடத்தில் கட்டடம் கட்டப் போகின்றார்கள்.

அதற்கும் அதிகாரிகள் துணையாக இருக்கின் றார்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு அரசு நிலம் பறிபோகின்றது.

ஏற்கெனவே பல கட்டுமான நிறுவனங்கள், அம்பத்தூர் தொழிற்பேட்டையைக் குறிவைத்து இயங்குகின்றன.

எனவே, விரைவில் அம்பத்தூர் தொழிற்பேட்டை மூடப்படுவது உறுதி.

- அருணகிரி, 

சென்னை

No comments:

Post a Comment