ஒமைக்ரானுக்கு தனி இன்சூரன்ஸ் தேவை இல்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 6, 2022

ஒமைக்ரானுக்கு தனி இன்சூரன்ஸ் தேவை இல்லை

புதுடில்லி, ஜன. 6- கரோனா நோய் தொற்றைகவர்செய்யும்ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள், ஒமைக் ரான் சிகிச்சைக்கான செலவுக ளையும் உள்ளடக்கம் செய்யும் என, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான அய்.ஆர்.டி..அய்., அறிவித்து உள்ளது.

இது குறித்து, அய்.ஆர்.டி.. அய்., தெரிவித்துள்ளதாவது: ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறு வனங்களால் வழங்கப்பட்டிருக்கும், கோவிட் சிகிச்சையை உள்ளடக்கம் செய்யும் அனைத்து ஹெல்த் இன் சூரன்ஸ் பாலிசிகளும், ஒமைக்ரான் சிகிச்சைக்கான செலவுகளையும் உள்ளடக்கம் செய்யும்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.

அண்மைக் காலமாக ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, அய்.ஆர்.டி. .அய்., இந்த விளக்கத்தை வழங்கி உள்ளது. மேலும், ஒமைக்ரான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர் களுக்கானகேஷ்லெஸ்வசதியை வழங்க, உரிய முயற்சிகளை, மருத்து வமனைகளுடன் இணைந்து விரை வாக எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

இதேபோல், கடந்த 2020இல், கரோனா தொற்று வேகமாக பர வியபோது, இழப்பீட்டு அடிப் படையிலான ஹெல்த் பாலிசிகள் எடுத்தவர்களுக்கு, கரோனாவுக் கான சிகிச்சைக்கான செலவுகளை யும் வழங்க வேண்டும் என தெரிவித்தது.

தற்போது, ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, அதற்கான சிகிச்சைக்கான செலவுகளையும் வழங்க வேண்டும் எனும் அறிவிப்பை அய்.ஆர்.டி. அய்.., வழங்கி உள்ளது.இதனால், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்கள், ஒமைக்ரான் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்காக, தனியாக பாலிசி எதுவும் எடுக்கத் தேவையிராது.

No comments:

Post a Comment