அய்தராபாத், ஜன. 6- கரோனாவுக்கு எதிராக முற்றிலும் உள்நாட்டில் அய்தராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது கோவேக்சின் தடுப்பூசி ஆகும். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, இந்தியா வில் புனே சீரம் நிறுவனம் தயா ரித்து வழங்குவது கோவிஷீல்டு தடுப்பூசி ஆகும்.
இவ்விரு தடுப்பூசிகளில் கோவேக் சினை முதல் டோசாகவும், கோவி ஷீல்டை இரண்டாவது டோசாக வும் அல்லது கோவிஷீல்டை முதல் டோசாகவும், கோவேக்சினை இரண்டாவது டோசாகவும் போட் டுக்கொண்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்புச்சக்தி கிடைப்பது ஆசியா ஹெல்த்கேர் பவுண்டேசன் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கலப்பு தடுப்பூசிகளின் பாது காப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிய இந்த ஆய்வு நடத் தப்பட்டது. மேற்கண்ட இரு தடுப் பூசிகளையும் இரு டோஸ்களாக செலுத்திக்கொள்கிறபோது, கரோனா வைரசின் ஸ்பைக் புர தத்தை அழிக்கிற நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உருவாவது இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாக அமைந்திருப்பதாக ஆசியா ஹெல்த் கேர் பவுண்டேசனின் ஏ.அய்.ஜி. மருத்துவமனையின் தலைவர் டி.நாகேஷ்வர் ரெட்டி தெரிவித்தார்.
No comments:
Post a Comment