வழக்கத்திற்கு மாறான பாடத்திட்டம் மது குடித்தல், உண்ணுதல் தலைப்பில் அறிமுகம்..!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 6, 2022

வழக்கத்திற்கு மாறான பாடத்திட்டம் மது குடித்தல், உண்ணுதல் தலைப்பில் அறிமுகம்..!!

பாரிஸ், ஜன. 6- பிரான்சில் உள்ள மிக சிறந்த பல்கலைக்கழகங்க ளில் ஒன்று போ லில்லி. இங்கு தான் மது உள் ளிட்ட பானங்கள், உணவு பழக்கம் மற்றும் முறை யான வாழ்க்கை முறை ஆகியவற்றில் கல்வியை தொடர விரும்புவோ ருக்கு என்று சிறப்பு முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அறிவியல் பிரிவின் கீழ் பி.எம்.வி. என்று பெய ரிடப்பட்டுள்ள இந்த முது கலை பிரிவு உணவுகள், மது உள்ளிட்ட பானங் கள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றிய பரந்த தலைப்புகளை உள்ளடக் கியது எனநியூயார்க் போஸ்ட்' இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

வழக்கத்திற்கு மாறான இந்த பாடத்திட் டத்தில் உணவு தொழில் நுட்பம், இறைச்சிக்கான தாவர மாற்ற உணவுகள், விவசாயத்தின் வரலாறு, சமயலறையில் பாலின பாகுபாடு உள்ளிட்ட தலைப்புகளும் இடம் பெற்றுள்ளன. இது தவிர உணவு மற்றும் பானங்கள் பற்றிய மாநாடுகளில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று பல் கலைக்கழக விரிவுரையா ளர் பினிட் தெரிவித்துள் ளார். இந்த கவர்ச்சிகர மான பாடத்திட்டம் அறி முகப்படுத்தப்பட்ட போது முதலில் மாண வர்கள் ஏளனம் செய்த தாக கூறும் பினிட், இந்த ஆண்டு 15 மாணவர்கள் பி.எம்.வி. பாடப்பிரிவில் சேர்ந்து பயின்று வருவ தாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment