வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 6, 2022

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

பியாங்யாங், ஜன. 6- அணு ஆயு தங்களை தாங்கிச்செல் லும்ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப் போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. அமெரிக்கா, தென்கொ ரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவு கணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும், தங் கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப் படுத்தி  வருகிறது.

இதற்கிடையில், புத் தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ‘இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்லஎன்று கூறினார். இதனால், இந்த ஆண்டு முதல் வடகொரியா ஏவுகணை பரிசோதனையை படிப் படியாக குறைத்துக் கொள்ளும் என நம் பிக்கை உருவானது.

இந்நிலையில், வட கொரியா மீண்டும் ஏவு கணை சோதனையில் இறங்கியுள்ளதுதொலை தூர இலக்கை துல்லிய மாக தாக்கி அழிக்கும் ஏவு கணையை வடகொரியா நேற்று (5.1.2022) சோதனை செய்துள்ளதாக தென் கொரியா மற்றும் ஜப் பான் தெரிவித் துள்ளது.

வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதி யில் இருந்து இந்த ஏவு கணை பரிசோதனை நடை பெற்றதாக ஜப்பான் கடற் படை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 500 கிலோமீட்டர் தூரம் பய ணித்து ஜப்பான் சிறப்பு பொருளாதார மண்டல கடற்பரப்பில் விழுந்த தாக ஜப்பான் பாதுகாப் புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 

No comments:

Post a Comment