காபூல், ஜன. 6- ஆப்கானிஸ் தானில் இருந்து அமெ ரிக்க படைகள் முற்றிலும் திரும்பப் பெற்றதை அடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இந்நிலை யில் இஸ்லாமிய எமி ரேட் ஆப்கானிஸ்தான் அமைப்பு தங்களது ராணு வத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்து பவர்களை இணைத்துள் ளதாக அறிவித்துள்ளது.
தலிபான்களின் சிறப் புப் படையாக தற்கொலை படைப் பிரிவு இருக்கும் என்றும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத் தின் கீழ் அது செயல்படும் என்றும் அந்நாட்டு தக வல் மற்றும் கலாச்சாரத் துறை துணை அமைச்ச ரும், தலிபான்களின் செய் தித் தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
சிறப்பு நடவடிக்கைக ளுக்கு இந்த தற்கொலை படை பிரிவு பயன்படுத்தப் படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலிபான் இராணுவத்தில் தேவையின் அடிப்படை யில் பெண்கள் பணியமர்த் தப்படுவார்கள், மேலும் முந்தைய ஆப்கான் ராணுவத்தைச் சேர்ந்த நிபுணர்களுக்கும் எதிர் கால ராணுவத்தில் பணி வழங்கப்படும் என்றும் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் மேனாள் ராணுவத்திற்கு எதிரான போரில் கடந்த 20 ஆண்டுகளாக தலி பான்களின் மிகப் பெரிய வெற்றிக்கு தற்கொலை படை தாக்குதல் பிரிவின் உத்திகளே காரணம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment