இந்திய பகுத்தறிவு சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் நரேந்திர நாயக் விளக்க உரை
ஒசூர், ஜன. 2- ஒசூரில் அறிவியல் மனப்பான்மைக்கான கூட்ட மைப்பு சார்பில் 26.12.2021அன்று "நவீன மூடநம்பிக்கை"என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் பேராசிரியர் நரேந்திர நாயக் - தலைவர் இந்திய பகுத்தறிவு சங்களின் கூட்ட மைப்பு (FIRA) அவர்கள் செய்முறை விளக்ககங்களுடன் உரை யாற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து விளக்கினர்.நிகழ்ச்சியில் பேராசியர்க்கு மாவட்ட திராவிடர்கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சிவந்தி அருணாசலம் ஆகியோர் இயக்க வெளியீடுகளான ஆங்கில நூல்களை வழங்கி பய னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
இந் நிகழ்ச்சி அரங்கில் திராவிடர் கழக நூல்கள் மக்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கபட்டிருந்தது.மூன்று விடு தலை சந்தா, ஒரு உண்மை சந்தாவும் பெறபட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட திராவிட மகளிர்பாசறை தலைவர் கண்மணி, பகுத்தறி வாளர் கழக மாவட்ட செயலாளர் சிவந்தி அருணாசலம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சித்தாந்தன், பெரியார் தொண்டர் அரசன், பரிமளம் பள்ளித் தாளாளர் சிறீதர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிவகுமார், முனைவர் சேதுராமன், பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டன்ர்.
No comments:
Post a Comment