ஒரத்தநாடு, ஜன. 2- ஒரத்தநாடு நகர இளைஞரணி தலை வர் பு.செந்தில்குமார் இல் லத்தில் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டது. தந்தை பெரியார் 48ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி ஒரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் பு.செந்தில்குமார் இல்லத் தில் நிறுவப்பட்ட அறிவு ஆசான் தந்தை பெரியார் சிலையை, ஒன்றிய பெருந் தலைவர் பார்வதி சிவ சங்கர் தலைமையிலும் ஒன்றியஅமைப்பாளர் மாநல்.பரமசிவம், நகர தலைவர் பேபி.ரவிச்சந் திரன், நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார் ஆகி யோர் முன்னிலையில் பெரியார் சிலையை, நகர இளைஞரணி அமைப்பா ளர் கே.எஸ்.பி. சக்கர வர்த்தி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பெரியார் வீர விளை யாட்டு கழக மாநில செய லாளர் இராமகிருஷ் ணன், மாவட்ட செயலா ளர் அருணகிரி, ஒன்றிய துணை தலைவர் துரை ராஜ், நகர இளைஞரணி செயலாளர் பேபி.ரெ. ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் பிரபு, ஒன்றிய விவசாய அணி செயலா ளர் மதியழகன், கருவிழி காடு சுப்பிரமணியன், பெரியார் நகர் உத்திரா பதி, திருவோணம் ஒன் றிய தலைவர் அரசிளங்கோ, கே.கே.சன்ஸ்.ஆனந்தன், மகளிர் அணி செயலாளர் பு.வித்யா மற்றும் ஏராள மான தோழர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment