புதுடெல்லி, ஜன.3 நாட்டில் கடந்தாண்டு மார்ச்சில் கொரோனா பரவல் அதிகரித்ததில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து செய்யப்பட்டு, காணொலி மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், பெரிய வழக்குகளின் வாதங்களை நீண்ட நேரம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், குளிர்கால விடுமுறைக்குப் பிறகு 2022, ஜனவரி 3ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும் என்று கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, இன்று முதல் நேரடி விசாரணை தொடங்கப்பட இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை உச்ச நீதிமன்ற அதிகாரிகள் செய்திருந்தனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற பதிவாளர் நேற்று (2.1.2021) மாலை வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், நாளை முதல் (இன்று) தொடங்கப்பட இருந்த நேரடி வழக்கு விசாரணை, 2 வாரங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. வழக்கம் போல் காணொலி மூலமாக மட்டுமே விசாரணை நடைபெறும்,’ என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment